"பா.ஜ.வில் சேர்ந்தவர்கள் கட்சியை தி.மு.க. போல மாற்றாமல் இருந்தால் சரிதான்"...| Dinamalar

பொது செய்தி

இந்தியா

"பா.ஜ.வில் சேர்ந்தவர்கள் கட்சியை தி.மு.க. போல மாற்றாமல் இருந்தால் சரிதான்"...

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (11)
Share
தமிழக அரசியலில் தற்போது அதிக மாற்றங்களை பார்க்க முடிகிறது. பல்வேறு அமைப்பு, கட்சிகளை சேர்ந்தவர்கள், குறிப்பாக, தி.மு.க.,வினர், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். பா.ஜ., செயல்பாடு குறித்து, தமிழக மக்கள் நன்கு உணரத் தொடங்கி உள்ளனர் - காயத்ரி ரகுராம்.'பா.ஜ.,வில் சேர்ந்தவர்கள், கட்சியை தி.மு.க., போல மாற்றாமல் இருந்தால் சரி தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., கலை, கலாசார
காயத்ரி ரகுராம், காமராஜ்

தமிழக அரசியலில் தற்போது அதிக மாற்றங்களை பார்க்க முடிகிறது. பல்வேறு அமைப்பு, கட்சிகளை சேர்ந்தவர்கள், குறிப்பாக, தி.மு.க.,வினர், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். பா.ஜ., செயல்பாடு குறித்து, தமிழக மக்கள் நன்கு உணரத் தொடங்கி உள்ளனர்
- காயத்ரி ரகுராம்.


'பா.ஜ.,வில் சேர்ந்தவர்கள், கட்சியை தி.மு.க., போல மாற்றாமல் இருந்தால் சரி தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., கலை, கலாசார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் பேச்சு.கொரோனா காலத்தில், சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் சேவைகள் அவசியம். தொற்று நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க, ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள், 24 மணி நேரமும் வேலை செய்கின்றனர். ஆனால், பணிக்கு வராத, 385 மருத்துவர்கள் உட்பட, 432 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
- அமைச்சர் ஷைலஜா டீச்சர்.


'கொரோனா ஒழிப்பில் சொதப்பிய கேரள அரசு, சுகாதார ஊழியர்களை பலிகடா ஆக்குகிறதோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், கேரள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் பேட்டி.விவசாயிகளிடம் இருந்து, பணம் வாங்கும், அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். ஒரு பைசா வாங்கினாலும், அது கேவலம் தான். அதை விட கேவலமான செயல், வேறு இல்லை
- அமைச்சர் காமராஜ்.


'இதுபோல, அனைத்து தரப்பினரும், 'கை' நீட்டாமல் இருந்தால் நல்லது தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பேட்டி.காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில், நடிகை குஷ்பு சேர்ந்துள்ளதால், அ.தி.மு.க., வலு கிடைக்காது; நல்ல கூட்டணி கட்சிகளால் தான், எங்களுக்கு பலம் கிடைக்கும்
- அமைச்சர் ராஜு.


latest tamil news

'பா.ஜ.,வுக்கும் வலு கிடைக்காது; சும்மா விளம்பரம் தான் கிடைக்கும்; ஓட்டு கிடைக்காதுங்கிறாங்களே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு பேட்டி.அண்ணா பல்கலைக்கழகத்தை உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக, தரம் உயர்த்தும் வாய்ப்பு கிடைத்தாலும், தி.மு.க.,வின் பொய் பிரசாரத்துக்கு பணிந்து, தமிழக அரசு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளது
- ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.


'அரசை நடத்துவது, தி.மு.க.,வா இல்லை, அ.தி.மு.க.,வா என்ற சநதேகம் அடிக்கடி வந்து விடுகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி.பா.ஜ., தலைமையிலான மத்திய அமைச்சரவையில், அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் என வெளியாகும் செய்திகள் தவறானவை. மத்திய அமைச்சரவையில், அ.தி.மு.க., அங்கம் வகிப்பது குறித்து எந்த முடிவும் இல்லை
- அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்.


'இப்பவே, 'பிட்'டை போட்டு வைக்கிறீர்கள் போலும். நேரம் வாய்க்கும் போது, அமைச்சரவையில் சேர வாய்ப்பு உள்ளதோ...' என, கேட்கத் துாண்டும் வகையில், அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் பேட்டி.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X