பொது செய்தி

இந்தியா

கொரோனாவை மோசமாக்கும் காற்று மாசு: வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா இறப்புகளுக்கும் காற்று மாசுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக முன்னணி ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில் தலைநகர் டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்றின் தரம் மோசமாகி உள்ளது.கடந்த இரண்டு வாரங்களில் டில்லி மற்றும் பிற வட மாநில நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசை பி.எம் 2.5 என்ற அளவீடு மூலம் கணக்கிடுவர். அதாவது ஒரு கன மீட்டர் பரப்பளவில் 2.5
காற்றுமாசு, டில்லி, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19

புதுடில்லி: கொரோனா இறப்புகளுக்கும் காற்று மாசுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக முன்னணி ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில் தலைநகர் டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்றின் தரம் மோசமாகி உள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் டில்லி மற்றும் பிற வட மாநில நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசை பி.எம் 2.5 என்ற அளவீடு மூலம் கணக்கிடுவர். அதாவது ஒரு கன மீட்டர் பரப்பளவில் 2.5 மைக்ரோ மீட்டர் சுற்றளவுக்கு குறைவான தூசிகள் (தலைமுடியை விட 100 மடங்கு சிறியது) எவ்வளவு நிரம்பியுள்ளன என்பதாகும். உலக சுகாதார நிறுவன பரிந்துரைப் படி பி.எம் 2.5 அளவு 25 மைக்ரோ கிராமிற்கு மேல் சென்றால் காற்றின் தரம் மோசமானதாகும். ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வு பி.எம் 2.5-ல் ஒரு மைக்ரோ கிராம் கூடினாலும் கொரோனா இறப்புகள் 8% அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் டில்லியில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரம் 180 முதல் 300 வரை உள்ளது. உலக சுகாதார நிறுவன பரிந்துரையை விட இது 12 மடங்கு அதிகமாகும். குளிர் காலத்தில் இது மேலும் மோசமாகும் என்கின்றனர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில், வாகனப் புகைகளான நைட்ரஜன் ஆக்சைடு போன்றவற்றை நீண்ட காலமாக சுவாசித்தவர்களுக்கு கொரோனா தொற்று மோசமாகிவிடுகிறது என தெரிவித்துள்ளது.


latest tamil news



இந்தியாவில் கொரோனா தொற்றையும் காற்று மாசுபாட்டையும் தொடர்புப்படுத்தி இதுவரை எந்த ஆய்வும் செய்யவில்லை. ஆனால் நச்சுக் காற்று வைரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தைத் தடுக்கும் என்று மருத்துவர்கள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

“காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அவசர கதியில் தொடங்க வேண்டும். குளிர்காலத்தில் வட மாநில நகரங்களை காற்று மாசில் இருந்து காக்க தவறினால் நிலைமை மோசமாகி மருத்துவமனைகள் நிரம்பி வழியும், இறப்பு விகிதம் கூடும்” என்கின்றனர். சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்கள் வருமுன் காத்துக்கொள்வது நல்லது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
21-அக்-202011:17:52 IST Report Abuse
S. Narayanan வருமுன் காப்பது நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X