பொது செய்தி

இந்தியா

தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறை: பிளாஸ்மா சிகிச்சையை நீக்க முடிவு?

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவின் தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சையை நீக்க ஆலோசிப்பதாக இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரவில்லை. தடுப்பு மருந்து கண்டறியும் வரையில் பல்வேறு மருத்துவ செயல்முறைகளை பின்பற்றி வந்தாலும், அதனால் ஓரளவே கொரோனா பாதிப்பில் இருந்து
ICMR, Considering, PlasmaTherapy, National Clinical Protocol, Covid-19, ஐசிஎம்ஆர், பிளாஸ்மா சிகிச்சை, நீக்கம், ஆலோசனை

புதுடில்லி: இந்தியாவின் தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சையை நீக்க ஆலோசிப்பதாக இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரவில்லை. தடுப்பு மருந்து கண்டறியும் வரையில் பல்வேறு மருத்துவ செயல்முறைகளை பின்பற்றி வந்தாலும், அதனால் ஓரளவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரமுடிந்ததே தவிர, முழுமையான சிகிச்சை முறையாக எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. ஹைட்ராக்சி குளோரோகுவின் மற்றும் ரெம்டெசிவிர் ஆகிய மருந்துகள் தற்போது கொரோனா பாதித்தோருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. மற்றொரு சிகிச்சை முறையாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோரிடம் பிளாஸ்மா எடுக்கப்பட்டு, அதை பாதித்தோர் உடலில் செலுத்தும் பிளாஸ்மா சிகிச்சை முறையும் நடைமுறையில் உள்ளது.


latest tamil news



இவை அனைத்தும் சோதனை அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சையை நீக்க ஆலோசிப்பதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் பலராம் பார்கவா கூறியதாவது: கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மற்றும் ஹைட்ராக்சி குளோரோகுவின் மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளின் சிகிச்சை விவரங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்கையில் இந்த மருந்துகள் எதிர்பார்த்த அளவு பலன் அளிக்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.


latest tamil news



இதைப் போல் இன்ஃபுளுயன்ஸா தடுப்பூசியும் கொரோனாவை தடுக்கவில்லை. பிளாஸ்மா சிகிச்சை குறித்து பல ஆய்வுகள் நடந்துள்ளன. இது எதிர்பார்த்த பலன் அளிக்காததால் தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையிலிருந்து நீக்கிவிடக் குழு ஆலோசித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஆன்டிபாடிகள் உருவாகி மீண்டும் தொற்று ஏற்படுவதில்லை. ஆனால் ஐந்து மாதங்களில் இந்த ஆன்டி பாடிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. எனவே அப்போது மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கொரோனாவில் இருந்து குணம் அடைந்தாலும் எப்போதும் முகக் கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
21-அக்-202011:25:01 IST Report Abuse
Dr. Suriya எங்க ஆயூர்வேத மற்றும் சித்தா மருந்து கொரானாவுக்கு எதிரே நல்ல செயல்படுதுன்னு குணமாக்குதுன்னு நிரூபிச்சுக்கிட்டு இருக்காங்க அத கொடுத்து குணப்படுத்த சொல்லுங்க ..ஒரு உயிர் இழப்பு கூட இல்லை .......அலோபதியில இதுக்கெல்லாம் மருத்து கிடையாது ...... சிகிச்சை செலவும் லட்ச கணக்குல .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X