பொது செய்தி

இந்தியா

லடாக்கில் கைதான சீன வீரர் ஒப்படைப்பு

Added : அக் 21, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
லடாக்: லடாக்கில், எல்லை தாண்டி வந்ததாக கைதான சீன ராணுவ வீரரை, இந்திய ராணுவ அதிகாரிகள் அந்நாட்டிடம் ஒப்படைத்தனர்.லடாக்கின் கிழக்குப்பகுதியில், நேற்று முன்தினம்(அக்.,19) இரவு சீன வீரர் ஒருவர் எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் வந்தார். அவரை பிடித்து இந்திய வீரர்கள் விசாரணை நடத்தினர். அதில், அவர் சீன ராணுவத்தை சேர்ந்த வாங் யா லாங் என்பதும், அவர் தவறுதலாக இந்திய பகுதிக்குள்
ladak, chinesesoldier, Indiansoldier,

லடாக்: லடாக்கில், எல்லை தாண்டி வந்ததாக கைதான சீன ராணுவ வீரரை, இந்திய ராணுவ அதிகாரிகள் அந்நாட்டிடம் ஒப்படைத்தனர்.

லடாக்கின் கிழக்குப்பகுதியில், நேற்று முன்தினம்(அக்.,19) இரவு சீன வீரர் ஒருவர் எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் வந்தார். அவரை பிடித்து இந்திய வீரர்கள் விசாரணை நடத்தினர். அதில், அவர் சீன ராணுவத்தை சேர்ந்த வாங் யா லாங் என்பதும், அவர் தவறுதலாக இந்திய பகுதிக்குள் வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன. அந்த வீரர், விரைவில் சீனாவிடம் ஒப்படைக்கப்படுவார் என இந்திய ராணுவம் அறிவித்தது. அந்த வீரரை, இந்திய ராணுவம் விரைவில் ஒப்படைக்கும் என சீனாவும் நம்பிக்கை தெரிவித்திருந்தது.


latest tamil news




இந்நிலையில், நேற்று (அக்.,20) இரவு வாங் யா லாங்கை, சீன ராணுவ அதிகாரிகளிடம் நமது வீரர்கள் முறைப்படி ஒப்படைத்தனர். அதற்கு முன்னதாக, அந்த வீரரிடம் சீன ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
21-அக்-202013:22:00 IST Report Abuse
Narayanan இந்தியா அமைதியை விரும்பி அதன் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறது . நம்மை அடுத்து இருக்கும் நாடுகளின் நாடுபிடிக்கும் ஆசை நமது அமைதியை கெடுக்கிறது . இலங்கை , பாகிஸ்தான் , சீனா , சீனத்தின் துணை கொண்டு இப்போது நேபாளமும் இரங்கி இருக்கிறது . நமது அமைதி அவர்களுக்கு புரியவில்லை .நாம் மதிக்கும் எதையும் அவர்கள் மிதிக்கிறார்கள்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
21-அக்-202011:09:22 IST Report Abuse
S. Narayanan தெரியாமல் எப்படி இந்தியாவுக்குள் நுழைய முடியும்.மற்றொரு நாட்டுக்குள் நுழைவது சட்டப்படி குற்றம் என்று கூட ஒரு ராணுவ வீரருக்கு தெரியாதா. இது வேண்டுமென்றே செய்த உளவு செயலாகும்.
Rate this:
Cancel
21-அக்-202010:45:14 IST Report Abuse
இராமன் அவன் தான் உளவாளி என்று தெரிந்து விட்டது, அப்புறம் எதற்க்கு வீரன் என்று பதுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X