சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி டிரைவரை தாக்கி பல கோடி மதிப்புள்ள மொபைல் போன்கள் கொள்ளை

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
ஒசூர்: டிரைவர்களை தாக்கிவிட்டு, லாரியை கடத்தி சென்று, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை பூந்தமல்லியில் இருந்து நேற்று (அக்.,20) மதியம் மொபைல்போன்களை ஏற்றி கொண்டு லாரி, மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு கிளம்பியது. வழியில் வேலூரில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு
லாரி, மொபைல்போன், கொள்ளை

ஒசூர்: டிரைவர்களை தாக்கிவிட்டு, லாரியை கடத்தி சென்று, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பூந்தமல்லியில் இருந்து நேற்று (அக்.,20) மதியம் மொபைல்போன்களை ஏற்றி கொண்டு லாரி, மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு கிளம்பியது. வழியில் வேலூரில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் மேல்மலை என்ற இடத்தில் இன்று அதிகாலை 2: 30 மணியளவில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது 3 லாரிகளில் பின் தொடர்ந்து வந்த 10 பேர் கும்பல், மொபைல் போன் ஏற்றி வந்த லாரியை மறித்து நிறுத்தினர். தொடர்ந்து, டிரைவர் அருண்(26), சதிஷ்குமார்(29) ஆகியோரை கடுமையாக தாக்கிவிட்டு, மொபைல்போன்களுடன் லாரியை கடத்தி சென்றனர். அங்கிருந்து, சுமார் 8 கி.மீ., தொலைவில் உள்ள அலகுபாவி என்ற இடத்தில், தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்திவிட்டு, மொபைல்போன்களை மட்டும் கொள்ளையடித்துவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது.


latest tamil news




அந்த லாரியில் 15 பெட்டிகளில் மொபைல் போன்கள் இருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் 496 மொபைல் போன்கள் இருந்ததும், மொத்தம் 7,440 மொபைல்போன்களின் மதிப்பு ரூ.7.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை வரும் எனத்தெரிகிறது. காயமடைந்த டிரைவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது எந்த கும்பல் என்பது தெரியவில்லை. அவர்கள் சென்னையில் இருந்தே பின்தொடர்ந்து வந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கிருஷ்ணகிரி டோல்கேட் மற்றும் பெங்களூருவுக்கு சென்றதா என்பதை தெரிந்து கொள்ள அத்திபள்ளி டோல்கேட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். மாவட்ட எஸ்.பி., ஒசூர் டிஎஸ்பி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்படடுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அ rajan -  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-202022:38:10 IST Report Abuse
அ rajan எல்லாம் எம்ஐ போன்கள் அதாவது ரெட்மி சைனீஸ் மேக்.... சீனா ஐட்டங்கள் தடை செய்யப்படும் இன்னும் எப்படி இவ்வளவு போன்கள் இங்கே உள்ளன என்று புரியவில்லை..
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
21-அக்-202021:38:56 IST Report Abuse
naadodi EMEI என்ற நம்பர் மூலம் யார் இந்த போனை வைத்திருந்தாலும் தேட முடியும்.. அசட்டுத்தனமான திருட்டு ..
Rate this:
Cancel
Shekar Raghavan - muscat,ஓமன்
21-அக்-202021:17:09 IST Report Abuse
Shekar Raghavan ஒவ்வ்ரு தொலைபேசிக்கு நம்பர் உண்டு , பிடிச்சுடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X