பொது செய்தி

இந்தியா

பங்குச்சந்தைகளில் தொடர் ஏற்றம்

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக உயர்வுடன் வர்த்தகமாகின. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் மேல் வர்த்தகத்தை தொடர்கிறது.ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக வர்த்தகமான போதிலும் உள்நாட்டில் முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட சில நிறுவன பங்குகளை அதிகளவில் வாங்க தொடங்கியதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் உயர்ந்து காணப்படுகின்றன. குறிப்பாக எச்டிஎப்சி.,
BSE, NSE, Sensex, Nifty,

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக உயர்வுடன் வர்த்தகமாகின. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் மேல் வர்த்தகத்தை தொடர்கிறது.

ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக வர்த்தகமான போதிலும் உள்நாட்டில் முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட சில நிறுவன பங்குகளை அதிகளவில் வாங்க தொடங்கியதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் உயர்ந்து காணப்படுகின்றன. குறிப்பாக எச்டிஎப்சி., ஐசிஐசிஐ., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றம் கண்டதாலும், பல்வேறு நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளியாகி வருவதாலும் அதன் மீதான எதிர்பார்ப்பிலும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி வருவதால் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.


latest tamil news




வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 400, நிப்டி 113 புள்ளிகள் உயர்ந்த நிலையில் காலை 11.45 மணியளவில் சென்செக்ஸ் 364.4 புள்ளிகள் உயர்ந்து 40,908.70ஆகவும், நிப்டி 100 புள்ளிகள் உயர்ந்து 11,997.25ஆகவும் வர்த்தகத்தை தொடர்ந்தன.

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.73.44ஆக வர்த்தகமானது.

சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 0.67 சதவீதம் குறைந்து 42.87 அமெரிக்க டாலராக விற்பனையானது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
21-அக்-202013:01:16 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே பங்கு சந்தை இறங்கிய போது இத்தனை லட்சம் கோடி நஷ்டம் என்று வாடிக்கையாளர்கள் தலையில் கை வைத்து இருப்பது போல படத்தை போட்டு கூறிய பத்திரிக்கைகள் எவ்வளவு புள்ளி நஷ்டம் என்று கூறவில்லை. ஆனால் இப்போது லாபக்கணக்கு புள்ளி கணக்கில் நானூறு என்று போடப்படுகிறது. இதை எத்தனை லட்சம் கோடி லாபம் என்று போடுங்கள். இதுவே நடுநிளையாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X