பொது செய்தி

தமிழ்நாடு

சிஏ படிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: பத்தாம் வகுப்பு முடித்த உடனே, பட்டயக்கணக்காளர் எனப்படும் சி.ஏ., படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என இந்திய பட்டயக்கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது.சி.ஏ., படிப்பை, இந்திய பட்டயக்கணக்காளர் நிறுவனமான ஐசிஏஐ நடத்துகிறது. இதில், பிளஸ் 2 முடித்த உடன், சி.ஏ., அடிப்படை பாடப்பிரிவுக்கு விண்ணப்பித்து பின்னர் 4 மாதங்கள் பயிற்சி பெற்று தேர்வு எழுதும் நிலையில், ஐசிஏஐ நிறுவனம்
CA, சிஏ, பத்தாம்வகுப்பு, தேர்வு,

இந்த செய்தியை கேட்க

சென்னை: பத்தாம் வகுப்பு முடித்த உடனே, பட்டயக்கணக்காளர் எனப்படும் சி.ஏ., படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என இந்திய பட்டயக்கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது.

சி.ஏ., படிப்பை, இந்திய பட்டயக்கணக்காளர் நிறுவனமான ஐசிஏஐ நடத்துகிறது. இதில், பிளஸ் 2 முடித்த உடன், சி.ஏ., அடிப்படை பாடப்பிரிவுக்கு விண்ணப்பித்து பின்னர் 4 மாதங்கள் பயிற்சி பெற்று தேர்வு எழுதும் நிலையில், ஐசிஏஐ நிறுவனம் புதிய மாற்றத்தை செய்துள்ளது.

இந்நிலையில், ஐசிஏஐ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பத்தாம் வகுப்பு முடித்த உடனே, சி.ஏ., அடிப்படை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் போதே சி.ஏ., தேர்வுக்கும் பயிற்சி பெற்று, பின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி முடித்து பின்னர், சி.ஏ., அடிப்படை பாடப்பிரிவுக்கான தேர்வை எழுதலாம். 10ம் வகுப்பு முடித்த உடன் சி.ஏ., அடிப்படை பாடப்பிரிவில் சேர பதிவு செய்தாலும், பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் பதிவு செல்லும். சி.ஏ., அடிப்படை பாடப்பிரிவில் தேர்ச்சியை அதிகரிக்கும் விதமாகவும், தேர்வுக்கு தயாராகும் காலத்தை அதிகப்படுத்தும் விதமாகவும், கால விரயத்தை தவிர்க்கும் விதமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




இந்த அறிவிப்பு சி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-அக்-202014:53:46 IST Report Abuse
முக்கண் மைந்தன் இத கொஞ்ச வருசம் முன்னமே செஞ்சிருந்தா நா எஞ்சினீரிங் படிச்சிருக்க மாட்டனே
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
21-அக்-202013:05:22 IST Report Abuse
r.sundaram பிளஸ் டூ படிக்கும்போது வணிகப்பிரிவு எடுத்து, அதில் ஓரளவுக்கு மேல் நன்றாக மார்க் வாங்கி தேறினால், பட்டய படிக்கு நேரடியாக சேரமுடியும் என்று கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X