ஆந்திராவில் நவ.,2 முதல் பள்ளிகள் திறப்பு

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
விஜயவாடா: ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகளை அரைநாள் மட்டும் திறக்க அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனையடுத்து, தற்போது ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் மத்திய அரசின் வழிகாட்டு
Andhra, SchoolOpen, JeganMohan,

விஜயவாடா: ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகளை அரைநாள் மட்டும் திறக்க அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இதனையடுத்து, தற்போது ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், மீண்டும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக மாணவர்கள் வருகை குறைந்துள்ளது. மேலும், இந்தியாவிலும் கொரோனா இரண்டாவது அலை வர வாய்ப்பு உள்ளதாக மத்திய ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.


latest tamil news


இதனையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு மாநிலங்களும் ஆலோசனை மேற்கொள்கின்றன. இதற்கிடையே நேற்று (அக்.,20) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ‛கொரோனா தொற்று முற்றிலுமாக இன்னும் நீங்கவில்லை, பண்டிகை காலத்தில் கொரோனா பரவலை தடுக்க மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஆந்திராவில் நவ.,2ம் தேதி முதல் அரைநாள் மட்டும் பள்ளிகள் திறக்க அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 1, 3, 5, 7, 9, 11ம் வகுப்புகளுக்கு ஒரு நாளும், 2, 4, 6, 8, 10, 12ம் வகுப்புகளுக்கு ஒருநாளும் என மாற்றி மாற்றி அரைநாள் மட்டும் (காலை வேலையில்) பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடைமுறை நவ., மாதத்திற்கு மட்டுமே எனவும், சூழலை பொறுத்து டிச., மாதத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
21-அக்-202015:35:28 IST Report Abuse
siriyaar தடுப்புசி வரும் வரை ஆன் லைன் வகுப்புகளே சிறந்தது. இதற்கு பதில் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச Samsung டேப் வழங்கலாம். மற்றும் அனைத்து கிராமங்களிளும் நல்ல இலவச இனைய வசதி செய்து கொடுத்தால் குழந்தைகளின் செலவு குறையும் நேரம் அதிகம் கிடைக்கும்
Rate this:
Cancel
21-அக்-202014:41:41 IST Report Abuse
ஆரூர் ரங் கொரோனா பரவுவது😡 போதவில்லை போலிருக்கு. மீதி பேரையும் 👹காவு வாங்கவா ?
Rate this:
Cancel
21-அக்-202013:19:50 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) இரண்டு மாதம் பொறுத்திருந்து 2021 ஜனவரியில் சூழ்நிலையை பொறுத்து பள்ளிகளை துவக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X