சென்னை: 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், அ.தி.மு.க., அரசுடன் இணைந்து போராட தயாராக உள்ளதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறும், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க, கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில், மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம், கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை. அவர் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை கேட்டு உள்ளார்.

இந்த மசோதா தொடர்பாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:
மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி
ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.
இந்த நேர்வில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்!
கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட @CMOTamilNadu முன்வர வேண்டும்! pic.twitter.com/eCGyxPXD5s
— M.K.Stalin (@mkstalin) October 21, 2020
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE