பொது செய்தி

இந்தியா

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் செல்லும்

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவித்துள்ளதுடெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லுபடியாகும். இதனால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற வேண்டும் எனில், மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த விதிமுறையில் தேசிய கல்விக்
TET, Qualification, Certificate, Validation, LifeTime, டெட், தேர்வு, தேர்ச்சி, சான்றிதழ், ஆயுள் முழுவதும் செல்லும்,

புதுடில்லி: டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவித்துள்ளது

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லுபடியாகும். இதனால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற வேண்டும் எனில், மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த விதிமுறையில் தேசிய கல்விக் குழுமம் தற்போது மாற்றம் கொண்டுவந்துள்ளது. அதாவது, இனி ஒரு முறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் செல்லும் என விதி திருத்தப்பட்டுள்ளது.


latest tamil news



தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சியடைந்து, சான்றிதழ் நீட்டிப்பு கோரி போராடி வருகின்றனர். இந்நிலையில், தேசிய கல்விக் குழுமம் மாற்றம் கொண்டு வந்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் நாள்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோருக்கு, ஆயுள் முழுவதும் செல்லும் வகையில் சான்றிதழ் அளிக்கப்படும் என்றும், ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழை நீட்டிப்பு செய்வது குறித்து சட்ட ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் தேசிய கல்விக்குழுமம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
21-அக்-202016:06:11 IST Report Abuse
siriyaar ஒவ்வொறு அரசு ஊழியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு வைக்க வேண்டும், நீதிபதிகள் 99 சதம் தேர்வில் பெயிலாவர். 90 சத அரசு ஊழியர்கள் தகுதியின்றி பணம் கொடுத்து சீட் வாங்கியவர்கள் தேர்வு வைத்தால் பலர் வீட்டிற்கு செல்வர். தகுதியில்ல அரசு ஊழியர்களே இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை, சீனா வழி விட்டாலும் இவங்க காலை பிடித்து கிடப்பர் இந்தியா நகறாது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-அக்-202014:06:33 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள், ஆனால் ஒரே வேண்டுகோள் தகுதியான ஆசிரியரா என்பதை ஆராய மாணவர்களுக்கு இவர்கள்நடத்தும் தேர்வுகளை அந்த ஆசிரியர்களும் சேர்ந்து எழுதினாலே தெரிந்துவிடும், காரணம் நடத்துவது எளிது ஆனால் தேர்ச்சி பெறுவது வினாத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களின்கைகளில் இருக்கிறது, ஆகவே திறமை வேறு , வெகுமதி வேறு, மொத்தத்தில் இனி ஆசிரியர்ப் பெருமக்களுக்கு இனி டென்சன் கிடையாது, வாழ்த்துக்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
21-அக்-202014:02:16 IST Report Abuse
Dr. Suriya ஆயுள் முழுவதும் செல்லும் .... ஆனால் வேலை கிடைக்குமா..... இப்போவே வேலைக்கான விண்ணப்பிக்கும் வயதை குறைத்து விட்டீர்களே...அப்புறம் ஆயுள் முழுமைக்கும் செல்லும்னா என்னா.... செல்லாட்டினா என்னா ...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X