பா.ஜ.,வுல ஐக்கியமாகி இருக்கும் நடிகை குஷ்பு, டில்லியில, கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திச்சப்போ, ‛தமிழகத்துல, பா.ஜ., அரசின் கொள்கைகளை கொண்டு சேர்க்கிற பணியை தீவிரமா செய்யப் போறேன்'னு, சொல்லியிருக்காங்க... உடனே, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த குஷ்புவை, தமிழகம் முழுக்க முஸ்லிம் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல ஏற்பாடு செய்யுங்கன்னு, தமிழக தலைவர் முருகன்கிட்ட, நட்டா சொன்னாராம்...
அதனால, குஷ்புவை முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அழைச்சிட்டு போய், சிறுபான்மை மக்களின் நலனுக்காக, பா.ஜ., அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் பற்றி, எடுத்துச் சொல்ல, தமிழக பா.ஜ., திட்டமிட்டு இருக்கு.
அதோட, ‛தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பெரிய அளவுல இல்லை... அதனால, நீங்க கடுமையா எதிர்க்க வேண்டியது, தி.மு.க.,வைத்தான்'னு, குஷ்புவிடம் நட்டா சொல்லியிருக்காரு… ‛தி.மு.க.,வின் பலம், பலவீனம் எல்லாம் எனக்கு தெரியும்... அவங்க கூட்டணியில இருந்ததால, விமர்சனம் செய்யாம இருந்தேன்... இனி தடையில்லை'ன்னு குஷ்பு சொல்லியிருக்காங்க... அதனால, குஷ்பு மூலமா, தி.மு.க.,வின் பல திடுக் தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருக்கு… !
சிவப்பு மையால் பெயரை அடித்த பன்னீர்

தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தனக்கு எதிரா தொடர்ந்து பல காரியங்களை செய்றாருன்னு, பன்னீர் செல்வத்திற்கு தகவலாம்... இதனால, அவர் மேல கடும் கோபத்துல இருக்காராம். கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினரா தளவாய் சுந்தரத்தை நியமிக்க, பன்னீருக்கு, முதல்வர் பழனிச்சாமி பரிந்துரைத்தாராம்... பட்டியல்ல தளவாய் சுந்தரம் பெயரை பார்த்ததும், சிவப்பு மையால பன்னீர் அடித்து விட்டாராம்...!
அழுத்தம் கொடுக்கும் தம்பிதுரை

அ.தி.மு.க., வழிகாட்டு குழுவுல தன் பெயர் இல்லாததால, கட்சி யின் மூத்த தலைவர்கள்ல ஒருவரும், லோக்சபா முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை அதிருப்தியாகிட்டாராம்... தொடர்ந்து சசிகலாவிடம் நெருக்கமாக இருந்து வரும் தம்பிதுரைக்கு, கட்சியின் முக்கியமான பதவியைக் கொடுக்க வேண்டாம்னு, முதல்வர் தான் முடிவெடுத்தாராம். முதல்வரின் முடிவால அதிருப்தியில இருக்கிற தம்பிதுரை, கட்சியில அடுத்தடுத்து போட இருக்கிற குழுக்கள்ல, தனக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு, அழுத்தம் கொடுத்துட்டு இருக்காராம்...!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE