பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இரவு 10 மணி வரை கடைகள் திறக்கலாம்: முதல்வர் உத்தரவு

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் நாளை (அக்.,22) முதல் இரவு 10 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதியளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், தமிழகத்தில் தற்போது காய்கறி, உணவகம் உள்ளிட்ட கடைகளை இரவு 9 மணிவரை திறந்திருக்கலாம் என தமிழக அரசு சார்பில்
தமிழகம், கடைகள்_திறப்பு, நேரம்_நீட்டிப்பு, முதல்வர், பழனிசாமி, உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நாளை (அக்.,22) முதல் இரவு 10 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதியளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், தமிழகத்தில் தற்போது காய்கறி, உணவகம் உள்ளிட்ட கடைகளை இரவு 9 மணிவரை திறந்திருக்கலாம் என தமிழக அரசு சார்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், இதில் நேரத்தை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news



பழனிசாமி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதியளிக்கப்படுகிறது. பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 9 மணிக்கு பதிலாக 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேர நீட்டிப்பானது காய்கறி, டீ, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்களுக்கும் பொருந்தும்.

நோய் தொற்று கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் இரவு 10 வரை கடைகள் இயங்கலாம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பண்டிகை காலங்களில் கடைகள், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sami Sam - chidambaram ,இந்தியா
21-அக்-202018:35:44 IST Report Abuse
Sami Sam நல்லதுதான் ஆனால் தொற்று பரவாமல் இருந்தால் சரி
Rate this:
Cancel
21-அக்-202017:54:24 IST Report Abuse
தமிழ் நல்லது
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-அக்-202016:35:52 IST Report Abuse
Lion Drsekar " நோய் தொற்று கட்டுப்பாடு பகுதிகள் தவிர" இந்த ஒரு வரிதான் எங்கு என்று யாருக்கும் தெரியாமல் போகிறது இதை வைத்து ஊழியர்கள் பணம் பார்க்கிறார்கள், சாரையாக கடையைப் பற்றி குறிப்பிடவில்லை அதுவுமா ..? வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X