பொது செய்தி

இந்தியா

போலீஸிற்கு மரியாதை : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : அக் 22, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டுக்குள் மக்களை காக்கும் போலீஸிற்கு மரியாதை செய்யும் விதமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் 'காவலர் வீர வணக்க நாள்' டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது.எல்லையில் ராணுவ வீரர்கள் நாட்டை காப்பது போன்று நாட்டிற்குள் மக்களை காப்பவர்கள் போலீஸ். வெயில், மழை, புயல் என எதுவானாலும் அவர்களின் பணி தொடர்கிறது. பணியின் போதே வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த்
PoliceCommemorationDay, Policeday, PoliceCommemorationDay2020,

புதுடில்லி : நாட்டுக்குள் மக்களை காக்கும் போலீஸிற்கு மரியாதை செய்யும் விதமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் 'காவலர் வீர வணக்க நாள்' டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது.

எல்லையில் ராணுவ வீரர்கள் நாட்டை காப்பது போன்று நாட்டிற்குள் மக்களை காப்பவர்கள் போலீஸ். வெயில், மழை, புயல் என எதுவானாலும் அவர்களின் பணி தொடர்கிறது. பணியின் போதே வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்., 21ம் நாள் காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இமயம் முதல் குமரி வரை போலீசாருக்கு அந்த மாநிலத்தில் மரியாதை செய்யப்படும். இந்தாண்டும் அது கடைப்பிடிக்கப்பட்டது.


latest tamil news



டில்லியில் உள்ள தேசிய போலீசார் நினைவகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார். இதேப்போன்று இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள முதல்வர்கள், மூத்த போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு சின்னத்தில் டிஜிபி திரிபாதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலும் அஞ்சலி செலுத்தினார்.

சமூகவலைதளமான டுவிட்டரிலும் போலீசாருக்கு புகழாரம் சூட்டி பலரும் வீர வணக்கம் செலுத்தியும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். அதிலும் இந்தாண்டு கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக போலீசார் முக்கிய பங்கு வகித்தனர். இதனால் கூட சிலர் உயிர் தியாகம் செய்தனர். அவர்களையும் நினைவுக்கூர்ந்து பலரும் வணக்கம் செலுத்தி வருகின்றனர். இதன்காரணமாக டுவிட்டரில் #PoliceCommemorationDay என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
21-அக்-202023:39:39 IST Report Abuse
கொக்கி குமாரு அதுலயும் பாருங்க, இப்படி வீரமாய் இருந்த போலீஸ் துறையையும் கெடுத்து குட்டிச்சுவராக்கிய பெருமை ஊழல்களின் தந்தை என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் கருணாநிதியையே சாரும். நன்றாக கவனித்து பாருங்கள், திருட்டு திமுக ஆட்சியில் இல்லையென்றால் போலீஸ் துறையில் நேர்மை இருக்கும். போலீஸை கண்டு ரௌடிகளும், குண்டர்களும் பயப்படுவார்கள். ஆனால், திருட்டு திமுக ஆட்சிக்கு வந்தால் திருடர்களும், ரௌடிகளும், குண்டர்களும் குஷியாகிவிடுவார்கள். அவர்களின் மீது எந்த வழக்குகளும் போட இயலாதபடி திமுகவின் மந்திரிகள், எம்எல்ஏக்கள் கட்சியின் முக்கிய அல்லக்கைகள் பார்த்துக்கொள்வார்கள். சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கவேண்டுமானால் யாரும் திருட்டு திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X