கிரிக்கெட் சங்க முறைகேடு: பரூக் அப்துல்லாவிடம் மீண்டும் விசாரணை

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்.,21) மீண்டும் விசாரணை நடத்தினர்.ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் 2002- 2011 ஆண்டுகளில் 43.69 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது. இதில், வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ., அதிகாரிகள், கிரிக்கெட் சங்க
கிரிக்கெட், முறைகேடு, பரூக்அப்துல்லா, அமலாக்கத்துறை, விசாரணை

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்.,21) மீண்டும் விசாரணை நடத்தினர்.

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் 2002- 2011 ஆண்டுகளில் 43.69 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது. இதில், வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ., அதிகாரிகள், கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக 2018ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, பிப்ரவரியில் 2.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கியது.


latest tamil news



இந்த கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில், தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 19ம் தேதி விசாரணை நடத்தினர். ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இரண்டாவது முறையாக இன்று, பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராஜ்பாக்கில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தது.


கண்டனம்



இதற்கு கண்டனம் தெரிவித்து, பரூக்கின் மகன் ஒமர் அப்துல்லா டுவிட்டரில் வெளியிட்ட பதிவு;
இன்று என் தந்தைக்கு 84வது பிறந்த நாள். எதிர்க்கட்சியினரை மிரட்டவும், குரலை ஒடுக்கவும் எத்தனை முறை சிபிஐ, அமலாக்கப்பிரிவு, ஊழல் தடுப்பு அமைப்புகளை பா.ஜ., அரசு பயன்படுத்தும். உங்களின் சதித்திட்டம் என்ன என்பதை கண்டுபிடித்துவிட்டேன். யாரேனும் மத்திய அரசுக்கு எதிராக பேசினால், துணிச்சலாக பிரிவினைவாத அரசியலை எதிர்த்தால் அவர்கள் வேட்டையாடப்பட்டு சம்மன் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
21-அக்-202021:07:46 IST Report Abuse
sankaseshan ஏனப்பா உமறு உங்கப்பன் தவறு செய்யவில்லை என்றால் கேஸ் போடு உங்கப்பன் யோக்கியன் இல்லை காஷ்மீர் ஏழைகள் வயிற்றில் அடித்து தான் மட்டும் சுகபோகத்தி ல் வாழ்ந்தவன் .
Rate this:
Cancel
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) அடித்த கொள்ளை காப்பற்ற தான் ஸ்பெசல் ஸ்டேட்டஸ் கேட்கிறானுங்க இந்த தேச துரோகி கூட்டம் அதர்க்கு அண்டை நாடு ஆதரவையும் கோரி உளளர்கள் அண்டை நாட்டு ஆதரவுடன் காஷ்மீர் உள்ள பிற மாநிலங்கள் /ராணுவத்தை விட கூடாது என்பது தான் இவர்கள் எண்ணம் ?????
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
21-அக்-202016:21:31 IST Report Abuse
Chandramoulli நாவடக்கம் இல்லை. தேச விரோதிகளுடன் கூடி குலாவுதல் மூலம் ஊழல் செய்ததை மறைத்து தப்பிக்க கூப்பாடு போடுகிறார். கடுமையான நடவடிக்கை தேவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X