விவசாயிகளின் வலியை புரிந்துக்கொள்ளாத பாஜ., அரசு: பிரியங்கா தாக்கு

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
லக்னோ: ‛வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என வேதனைத் தெரிவிக்கும் விவசாயிகளின் வலிகளை பாஜ., அரசு புரிந்துக்கொள்ளவில்லை' என காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உறுதி
Congress, Priyanka, Farmers, FarmBill, MSP, UP, SellCrops, காங்கிரஸ், பிரியங்கா, விவசாயிகள், வேளாண் சட்டம், குறைந்தபட்ச ஆதார விலை, உத்தர பிரதேசம், நெல்,

இந்த செய்தியை கேட்க

லக்னோ: ‛வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என வேதனைத் தெரிவிக்கும் விவசாயிகளின் வலிகளை பாஜ., அரசு புரிந்துக்கொள்ளவில்லை' என காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உறுதி செய்யப்படும் எனவும், விவசாயிகளின் வருவாய் உயர்த்தப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா, தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:


latest tamil news


பாஜ., அரசு வேளாண் சட்டங்களை கொண்டுவருவதில் மற்றவர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என்று வேதனைத்தெரிவிக்கும் விவசாயிகளின் வலிகளையும் பாஜ., அரசு புரிந்துகொள்ளவில்லை. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ரூ.1,868-க்கு விற்பனை செய்யவேண்டிய நெல், குவிண்டாலுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,100 வரை மட்டுமே விற்கப்படுகிறது.

இதுவே விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படவில்லை எனில் என்ன நடக்கும் என கற்பனை செய்து பாருங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naga Rajan - Ponnamaravathy,இந்தியா
21-அக்-202022:53:13 IST Report Abuse
Naga Rajan அதை சொல்ல தகுதி உனக்கு இல்லை
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
21-அக்-202022:14:16 IST Report Abuse
Mannai Radha Krishnan கலப்பை என்றான் என்ன ? மாட்டில் பால் எங்கிருந்து வரும் ? என்று எதுவும் தெரியாத அறியாப் பிள்ளை.....தூளியில் துள்ளுது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
21-அக்-202021:21:53 IST Report Abuse
Ramesh Sargam 'விவசாயிகளின் வலியை பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்"? நாட்டை கொள்ளையடிப்பதை விட்டு இவர்களுக்கு வேறென்ன தெரிய வாய்ப்பிருக்கிறது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X