மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையாக, தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையில் இன்று (அக்.,21) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவைக்
Bonus, CentralGovt, SingleInstallment, Employees, UnionMinister, PrakashJavadekar, போனஸ், மத்திய அரசு, ஒரே தவணை, ஊழியர்கள், அமைச்சரவை, ஒப்புதல், பிரகாஷ் ஜவடேகர்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையாக, தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று (அக்.,21) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக ரூ.3,737 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.


latest tamil news


இந்த போனஸ், வரும் விஜயதசமிக்கு முன் ஒரே தவணையாக, நேரடியாக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பண்டிகை காலத்தில் பணப்புழக்கம் அதிகரித்து, பொருட்களுக்களுக்கான தேவை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-அக்-202006:06:10 IST Report Abuse
D.Ambujavalli ஒவ்வொரு ஆண்டும் போனஸ், வருஷாந்தர ஊதிய உயர்வு, விடுமுறை பணப்பரிமாற்றம் எல்லாமே சாதாரணமாக நடப்பதுதான். இதைக்கூட பெரிதாக விளம்பரப்படுத்தி அரசின் சாதனையாக அறிவிப்பது தேர்தல் ஸ்டண்ட் தானே
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
21-அக்-202023:07:23 IST Report Abuse
J.Isaac லட்சகணக்கான டிரைவர்களும், ஆட்டோ ஓட்டுனர்களும், நர்சரி பள்ளி நடத்துபவர்களும், அதன்ஆசிரியர்களும், தனியார்பள்ளி ஆசியர்களும்,வாழ்வாதாரம் இழந்து, ஆதரவற்றோர்களும், அனாதைகளும், முதியவர்களும் தொழுநோயாளிகளும் வாழ்வில் நம்பிக்கை இழந்து தத்தளிக்கும் போது சொகுசு வாழ்க்கை வாழும் அரசு ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பது மனிதநேயமா?
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
21-அக்-202021:08:30 IST Report Abuse
sankaranarayanan இதேபோன்று தமிழக அரசும் எல்லா அரசி வாங்கும் ரேஷன் கார்டு உள்ளவர்களின் வங்கிக்கணக்கில் - திரும்பவும் சொல்கிறேன் - வங்கின் கணக்கில் Rs.2,000/= செலுத்தினால் சச்சரவு எதுவும் இல்லாமல் ஏழை எளிய மக்களை அந்தப்பணம் செண்ரடையும். - இல்லையேல் அப்பணம் நடுவழியில் ஆபேஸ் ஆகிவிடும். ரேஷன் கடைகளில் கையில் கொடுக்காமல் அவர்களின் வாங்கி அக்கவுண்டுக்கு செலுத்தினால் போதும், ரேஷன் கடையில் வேலையும் குறையட்டும் - எந்தப்புகாரும் வாராது இதை உடனே அமல்படுத்தவும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X