நிதிஷ்குமார் வெற்றிப் பெற்றால் பீஹார் அழிந்துவிடும்: சிராக் பஸ்வான்

Added : அக் 21, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
பாட்னா: பீஹார் தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமார் வெற்றிப்பெற்றால், மாநிலம் மீண்டும் அழிவின் விளிம்பிற்கு செல்லும் என லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.பீஹாரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 28-ம் தேதி நடக்கவுள்ளது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய லோக் ஜனசக்தி, ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்களை
BiharElections, ChiragPaswan, NitishKumar, Wins, Elections, ByMistake, Bihar, Ruined, பீஹார், தேர்தல், சிராக் பஸ்வான், நிதிஷ் குமார், வெற்றி, அழிந்துவிடும்

பாட்னா: பீஹார் தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமார் வெற்றிப்பெற்றால், மாநிலம் மீண்டும் அழிவின் விளிம்பிற்கு செல்லும் என லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

பீஹாரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 28-ம் தேதி நடக்கவுள்ளது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய லோக் ஜனசக்தி, ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்களை எதிர்த்து தனது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அதேநேரத்தில் பாஜ., வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலில் போட்டியிடாமல், தேர்தல் வெற்றிக்கு பின் பாஜ.,வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க லோக் ஜனசக்தி திட்டமிட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில் லோக் ஜனசக்தி கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் இன்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் இந்தத் தேர்தலில் தவறுதலாக வெற்றி பெற்றால், அது மாநிலத்தின் தோல்வியாக அமையும். மாநிலம் மீண்டும் அழிவின் விளிம்பிற்கு செல்லும். வகுப்புவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நபரின் தலைமையில் பீஹார் மாநிலம் வளர்ச்சி பெறுமா என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையானது ‛பீஹாருக்கு முதலிடம், பீஹார் மக்களுக்கு முதலிடம்' என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. பீஹார் மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும் அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-அக்-202003:43:40 IST Report Abuse
J.V. Iyer நிதிஷ்குமார் வெற்றிப் பெற்றால் அழிவது சிராக் பஸ்வான் அரசியல் பயணமும், அவர் கட்சியும்தான்.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
22-அக்-202002:18:19 IST Report Abuse
NicoleThomson கொடுமையடா இது போன்ற அரசியல்வியாதிகள் , இவ்ளோ நாளு அவர்தானே ஆட்சி செய்தார் , அழிந்திருக்குதா?
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
22-அக்-202000:57:32 IST Report Abuse
Rpalnivelu வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குகிறது ஆளுவதற்குரிய எந்தவித தகுதியோ பண்போ இல்லாதவர்களை வாரிசு அரசியல் முனைகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X