பிளாஸ்மா சிகிச்சையால் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நலம்: டில்லி அமைச்சர்| Dinamalar

பிளாஸ்மா சிகிச்சையால் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நலம்: டில்லி அமைச்சர்

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020
Share
புதுடில்லி: பிளாஸ்மா சிகிச்சை முறையால் தான் உட்பட 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மறுவாழ்வு பெற்றுள்ளதாக டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திரநாத் ஜெயின் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரசுக்கு இதுவரையில் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வராத நிலையில், இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் பிளாஸ்மா சிகிச்சையை செயல்படுத்தி வருகின்றன. சோதனை அடிப்படையில்
PlasmaTherapy, Saved, Lives, IncludingMine, SatyenderJain, ICMR, Decision, பிளாஸ்மா சிகிச்சை, மறுவாழ்வு, டில்லி, சுகாதாரத்துறை, அமைச்சர், சத்யேந்திரநாத் ஜெயின், ஐசிஎம்ஆர்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பிளாஸ்மா சிகிச்சை முறையால் தான் உட்பட 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மறுவாழ்வு பெற்றுள்ளதாக டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திரநாத் ஜெயின் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு இதுவரையில் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வராத நிலையில், இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் பிளாஸ்மா சிகிச்சையை செயல்படுத்தி வருகின்றன. சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறையை தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து நீக்க ஆலோசிப்பதாக இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. பிளாஸ்மா சிகிச்சையில் எதிர்பார்த்த பலன் அளிக்காததால் ஆலோசிப்பதாக ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் பலராம் பார்கவா தெரிவித்தார்.


latest tamil news



இது குறித்து டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், ‛கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில், பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் நான் உள்பட 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். மேலும், அமெரிக்காவும் பிளாஸ்மா சிகிச்சை பலனளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்,' எனக் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X