இந்த செய்தியை கேட்க
போபால்: பெண் வேட்பாளரை 'ஐயிட்டம்' என அவதூறாக பேசியது குறித்து முன்னாள் முதல்வர் கமல்நாத் 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கண்டிப்பு காட்டியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் 21 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்து பாஜ.,வில் சேர்ந்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்., ஆட்சி கவிழ்ந்து, சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. ராஜினாமா செய்யப்பட்ட தொகுதிகளுக்கு வரும் நவ.,3ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்.,கில் இருந்து பாஜ.,விற்கு சென்ற முன்னாள் பெண் அமைச்சர் இமர்தி தேவி என்பவருக்கு அந்த தொகுதி இடைத்தேர்தலில் பாஜ., வாய்ப்பளித்துள்ளது.

அவரை எதிர்த்து போட்டியிடும் காங்., வேட்பாளரை ஆதரித்து கடந்த 18-ம் தேி கமல்நாத் பேசினார். அப்போது கமல்நாத் பேசுகையில் அந்த பெண் வேட்பாளரை "ஐட்டம்' என குறிப்பிட்டு அவதூறாக பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்.இவரது பேச்சை காங். எம்.பி.ராகுலும் கண்டித்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது .புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் 48 மணி நேரத்தில் கமல் நாத் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE