பொது செய்தி

இந்தியா

இனி இந்தியா சேமிப்பாளர்களின் தேசமல்ல

Updated : அக் 23, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
மும்பை : இந்தியா, 'சேமிப்பாளர்களின் தேசம்' என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.ஓய்வுக் காலத்துக்கான திட்டமிடல் குறித்து, மக்களின் எண்ணத்தை அறிய , நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து, பி.ஜி.ஐ.எம்., இந்தியா மியூச்சுவல் பண்டு நிறுவனம் கருத்தாய்வு ஒன்றை மேற்கொண்டது.இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:*
இனி இந்தியா, சேமிப்பாளர்களின் தேசமல்ல

மும்பை : இந்தியா, 'சேமிப்பாளர்களின் தேசம்' என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஓய்வுக் காலத்துக்கான திட்டமிடல் குறித்து, மக்களின் எண்ணத்தை அறிய , நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து, பி.ஜி.ஐ.எம்., இந்தியா மியூச்சுவல் பண்டு நிறுவனம் கருத்தாய்வு ஒன்றை மேற்கொண்டது.இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

* வீட்டுக்கடன், பிணை பாதுகாப்பற்ற கடன்கள், கிரெடிட் கார்டுகள் ஆகியவை அதிகரித்து வரும் நிலையில், இந்தியர்கள் குறைவாகவே சேமிக்கின்றனர்
* எதிர்காலத்துக்கான சேமிப்பு மற்றும் திட்டமிடலுக்குப் பதிலாக, நடப்பு செலவினங்கள் மீதே அதிக கவனம் செலுத்துகின்றனர்


* நிலையான வேலை; 60 வயதில் ஓய்வு என்ற காலமும் மலையேறிக் கொண்டிருக்கிறது

* நகர்ப்புறங்களைச் சேர்ந்த இந்தியர்கள் குறைவாகவே சேமிக்கின்றனர்; குறைவாகவே செலவழிக்கின்றனர். 59% வருவாயை, நடப்பு லவினங்களுக்காகவே ஒதுக்குகின்றனர்

* பெரும்பாலான இந்தியர்களுக்கு, ஓய்வுகால நிதி என தனியாக இருப்பதில்லை. இதற்கு அவர்கள் கையில் வேறு நிதி அல்லது முதலீடுகள் இருப்பதும் ஒரு காரணம்

* கிட்டத்தட்ட, 51 சதவீதம் பேர், பணி ஓய்வுக்காக எதையும் மேற்கொள்ளவில்லை

* பணி ஓய்வு காலத்திற்காக தயாராக இல்லை என்று கருதுகிற, 89 சதவீதம் பேருக்கு வேறு வழிகளில் வருவாய் எதுவுமில்லை.

* ஐந்தில் ஒரு பங்கு இந்தியர்களே, பணி ஓய்வுக்காக திட்டமிடும் போது, பணவீக்கத்தை கருத்தில் கொள்கின்றனர்

* பணி ஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கைக்கு தேவைப்படும் தொகை எவ்வளவு என்பது பற்றி, 48 சதவீத நபர்களுக்கு எதுவும் தெரியவில்லை.

இன்றைக்கு கல்விக்கு, காருக்கு வீடுக்கு என அனைத்துக்கும் கடன் கிடைக்கும். ஆனால் பணி ஓய்வுக் காலத்துக்கு மட்டும் கடன் கிடைக்காது. சேமித்து வைத்தால் தான் உண்டு.
அஜித் மேனன், தலைமை செயல் அதிகாரி, பி.ஜி.ஐ.எம்., இந்தியா மியூச்சுவல் பண்டு

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
23-அக்-202000:01:19 IST Report Abuse
Amirthalingam Shanmugam கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்க்கை வாழ்ந்து கொண்டுயிருக்கிறோம். இதில் சேமிக்க பணம் எங்கே இருக்கிறது.வருடத்திற்கு நான்கு முறை விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது.வருமானம் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறி ரொம்ப நாட்களாயிற்று.ஓய்வு பெற்ற முதியோர்களின் வங்கி சேமிப்புக்கு வட்டியை வருடா வருடம் குறைத்துக்கொண்டு வந்து பூஜ்ஜியத்தில் நிறுத்தாமல் விடமாட்டார்கள் போல.விலைவாசியால் ஏற்படும் பண வீக்கத்திற்கும் மூத்தக்குடிமகனின் சேமிப்பு வட்டிக்கும் சம்பந்தமே இல்லை. வயதான காலத்தில் உணவுக்கும் ,மருந்துக்கும் சேமிப்புக்கு மேல் கடன் வாங்கி செலவு செய்து ,கடனை வாரிசு தலையில் கட்டிவிட்டு போய்ச்சேரவேண்டியதுதான்.
Rate this:
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
22-அக்-202018:57:38 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே எப்படி சேமிக்க முடியும். சில லட்சம் ரூபாய் எடுக்க வங்கிக்கு சென்று இரண்டாயிரம் ரூபாயாக கொடுங்கள் என்றால் கிடையவே கிடையாது என்கிறார்கள். ஆனால் ரெய்டில் சிக்குவது அனைத்துமே இரண்டாயிரம் கட்டுக்கள் தான். இப்படி வங்கியே நாட்டை சூரையாடும் கும்பலுக்கு துணை போனால் எங்கிருந்து மக்களிடம் சேமிக்கும் எண்ணம் இருக்கும் ? பணத்தை பிக்சட் டெபாசிட்டில் இட்டு வைத்தால் வட்டி மிகவும் குறைவு. ஐந்து ஆறு வருடங்கள் கழித்து அந்த பணத்திற்கு மதிப்பு இல்லை. அப்படி இருக்க எப்படி சேமிக்க முடியும் ? இடம் வாங்கிப் போடலாம், பிளாட் வாங்கலாம் என்றால் மூன்று மடங்கு விலை சொல்கிறார்கள். நியாயமான விலை கூறுவதில்லை. இதை கட்டுப்படுத்த யாரும் இல்லை. அதனால் கொள்ளை அடிப்பவன் கை ஓங்கி இருக்கிறது.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-அக்-202016:59:39 IST Report Abuse
தமிழவேல் நன்றாக சிந்தித்துப் பார்த்தால், ஆபத்தான நிலையில் இருக்கின்றோம் என்பது தெரியவரும்.
Rate this:
mohan - chennai,இந்தியா
22-அக்-202021:12:03 IST Report Abuse
mohanஉண்மை.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X