அரசியல் செய்தி

தமிழ்நாடு

இரவு 10:00 மணி வரை கடைகளை திறக்க அனுமதி

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (6+ 3)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில், கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும், இன்று முதல், இரவு, 10:00 மணி வரை திறந்திருக்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என, அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதால், வியாபாரிகள், பொது மக்கள் நலன் கருதி, அரசு இந்த அறிவிப்பை, நேற்று வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா நோய் பரவலைத் தடுக்க, மார்ச் 25 முதல், ஊரடங்கு அமலில் உள்ளது.
இரவு 10:00 மணி ,கடைகள், திறக்க  அனுமதி

சென்னை : தமிழகத்தில், கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும், இன்று முதல், இரவு, 10:00 மணி வரை திறந்திருக்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என, அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதால், வியாபாரிகள், பொது மக்கள் நலன் கருதி, அரசு இந்த அறிவிப்பை, நேற்று வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா நோய் பரவலைத் தடுக்க, மார்ச் 25 முதல், ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்று மாதங்களுக்கு பின், மக்களின் வாழ்வாதாரம் கருதி, தமிழக அரசு, அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.



தடை தொடர்கிறது



எனினும், இம்மாதம் 31ம் தேதி வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அறிவித்த தளர்வுகளின்படி, இரவு, 9:00 மணி வரை கடைகள் திறந்திருக்க, அனுமதி அளிக்கப்பட்டது.உணவகங்கள் மற்றும் டீக்கடைகள், காலை, 6:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை திறந்திருக்கவும், இரவு, 10:00 மணி வரை, 'பார்சல்' சேவைக்கும், அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.மின்சார ரயில் இயங்கவும், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலா தலங்கள் போன்றவற்றை திறக்கவும், தடை தொடர்கிறது.இம்மாதத்தில் துவங்கி, அடுத்தடுத்து ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என, பண்டிகைகள் வருவதால், இரவு, 10:00 மணி வரை கடைகளை திறக்க, அனுமதிக்க வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்று, முதல்வர் பழனிச்சாமி, நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா நோய் தொற்றை தடுக்க, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தமிழகத்தில், மார்ச், 25 முதல், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.நோய் தொற்றிலிருந்து, மக்களை காத்து, அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் நோய் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்கு பின், குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம், நாட்டிலேயே அதிகமாக உள்ளது.


6 அடி இடைவெளி



மேலும், நோய் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பும் குறைவாக இருந்து வருகிறது.எதிர்வரும் பண்டிகைக் காலம், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம், நோய் தொற்றின் தன்மை ஆகியவற்றை கருத்தில் வைத்து, இரவு, 10:00 மணி வரை, கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.தமிழகம் முழுதும், முழு கட்டுப்பாட்டு பகுதி தவிர, மற்ற பகுதிகளில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், இன்று முதல், இரவு, 10:00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

எதிர்வரும் பண்டிகைக் காலங்களில், நோய் தொற்று அதிகரிக்காமல் தடுக்க, கடைகள் மற்றும் பொது இடங்களில், மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முக கவசம் அணிவதையும், குறைந்தது, 6 அடி இடைவெளி கடைப்பிடிப்பதையும், அடிக்கடி சோப்பால் கைகளை கழுவுவதையும், பொது மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.திரையரங்கு உரிமையாளர்கள், முதல்வரை சந்தித்து, திரையரங்குகளை திறக்க, அனுமதி அளிக்கும்படி கோரியுள்ளனர். எனவே, அடுத்த வாரம், திரையரங்கு திறப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6+ 3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sami singai - singapore,சிங்கப்பூர்
22-அக்-202012:54:04 IST Report Abuse
Sami singai கூடிய சீக்கிரம் இந்தியாவை நம்பர் ஒன்னு ல கொண்டுக்கிட்டு வந்துடுங்க. இந்த வருஷம் தீபாவளி கொண்டதா கொஞ்சம் குறைச்ச தான் என்னவாம். உலகமே பார்த்து நடுங்குது உங்களுக்கு பண்டிகை கொண்டாடித்தான் ஆகணுமா.
Rate this:
Cancel
Sridharan - Coimbatore,இந்தியா
22-அக்-202011:15:32 IST Report Abuse
Sridharan இரவு பத்து மணி வரை அணைத்து கடைகளும் திறந்து வைக்கலாம். அரசின் வருமானத்திற்காகவும் பெரிய முதலாளிகளின் வருமானத்தை பெருக்கவும் எடுக்கப்பட்ட முடிவு. சிறு குறு நிறுவனங்களில் பணிபுரியும் நடுத்தர மக்களின் நிலைமையை பற்றி கவலை படாமல் எடுக்கப்பட்ட முடிவு. ஏழு மணிக்கு மேல் பேருந்து வசதி இல்லை. பணி முடித்து செல்லும் நடுத்தர மக்கள் எப்படி வீடு செல்ல முடியும் என்பதை கண்டு கொள்ளாத அரசு. சிறு நிறுவன முதலாளிகள் சரியான சம்பளமும் தருவதில்லை. அனைத்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வேலை வாங்குகிறார்கள். வரும் அரசு அதிகாரிகள் பணிபுரியும் பணியார்களிடம் அவர்களின் கஷ்டங்களை பற்றி எதுவும் கேட்பதும் இல்லை. மிகவும் வருந்த தக்க முடிவு
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
22-அக்-202007:27:44 IST Report Abuse
கொக்கி குமாரு தயவுசெய்து யாரும் இரவு 8 மணிக்கு மேல் பரோட்டா கடை, ஆம்லெட் கடை, சிக்கன் பிரியாணி கடை, மட்டன் பிரியாணி கடை, ஊத்தப்பம் கடை இவைகளை திறந்துவைக்க வேண்டாம். திருட்டு திமுகவின் ரௌடிகள், குண்டர்கள், அல்லக்கைகள் குடித்துவிட்டு ஓசியில் பிரியாணி கேட்டு குஸ்தி சண்டை போடுவார்கள்.
Rate this:
kokki - ,
22-அக்-202014:24:56 IST Report Abuse
kokki seri...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X