பொது செய்தி

இந்தியா

விரைவில் மற்றொரு பொருளாதார உதவித் தொகுப்பு? - நிதியமைச்சகம் தகவல்

Updated : அக் 21, 2020 | Added : அக் 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புது டில்லி: தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க மற்றொரு உதவித் தொகுப்பை வழங்கும் நடவடிக்கையில் மத்திய நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. கொரோனா தொற்றால் தெற்காசியாவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளதாரங்களில் இந்திய பொருளாதாரம் முதலிடத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளியான முதல் காலாண்டு முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 23.9% சுருங்கியது.

புது டில்லி: தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க மற்றொரு உதவித் தொகுப்பை வழங்கும் நடவடிக்கையில் மத்திய நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.



latest tamil news



கொரோனா தொற்றால் தெற்காசியாவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளதாரங்களில் இந்திய பொருளாதாரம் முதலிடத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளியான முதல் காலாண்டு முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 23.9% சுருங்கியது. முன்னதாக மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார உக்குவிப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. பின்னர் ஊரடங்குகள் படிபடியாக தளர்த்தப்பட்டன. தற்போது கட்டுமானம், உற்பத்தி, ஹோட்டல் துறைகள் போன்றவை ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றொரு ஊக்குவிப்பு திட்டத்திற்கான வாய்ப்பை கைவிடவில்லை, ஒன்றை அறிவிக்கும் போது சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து கருத்துக்களை பரிசீலிக்கிறோம் என கூறியிருந்தார். தற்போது மற்றொரு உதவித் தொகுப்பை ஆராயுமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். இத்தகவலை பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.


latest tamil news



மேலும் அவர் “தேவையான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடமிருந்து அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் கிடைத்துள்ளன. அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்குத் தயாராகும் போது, இந்த ஆண்டிற்கான செலவு மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் தேவைகளையும் நாங்கள் கவனித்து வருகிறோம்.” என்று கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-அக்-202022:23:25 IST Report Abuse
Bhaskaran நேரடியாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு சார்பில் பண்டிகை பணம் கொடுங்கள் .அரசு ஊழியர் வருமானவரிகட்டுவோரை நீக்கிவிட்டு
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
22-அக்-202013:28:36 IST Report Abuse
sundarsvpr சிக்கனம் தேவை. அரசு செலவீனங்களை குறைக்கவேண்டும். அதனை பின்பற்றி நாட்டுமக்களும் அரசியல் வேறுபாடின்றி பின்பற்றவேண்டும். தொலைக்காட்சி விடிய விடிய பார்ப்பது. உப்புசப்பில்லாத விதாண்டாவாத விவாத மேடை குறிப்பாய் அரசியல் விவாதம் தவிர்த்தல் அவசியம். சினிமா உணவு விடுதி பலகார கடைகள் விற்பனை கட்டுப்பாடு செய்தாலே சேமிப்பு தொகையில் மட்டுமல்ல உணவு தானிய சேமிப்பிலும் கிடைக்கும். அரசிற்கு வரி மூலம் வருமானம் கிடைக்கிறது என்பதற்கு தேவையற்ற வணிகங்களை அனுமதிக்கக்கூடாது.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-அக்-202023:24:35 IST Report Abuse
தமிழவேல் மேலும் மேலும் வடையா.....🤔🤔🤔 பகோடா போடுங்க மேடம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X