'சூப்பர் ஹிட்' கூட்டணி!

Added : அக் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
'சூப்பர் ஹிட்' கூட்டணி!பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் சுஷில் மோடி மீது, ஊழல் புகார்கள் எதுவும் இல்லை. இந்திய கிரிக்கெட் அணியில், துவக்க ஜோடியாக களமிறங்கும் சச்சின் மற்றும் சேவாக்கை போல், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி, 'சூப்பர் ஹிட்' கூட்டணியாகும்.ராஜ்நாத் சிங்ராணுவ அமைச்சர், பா.ஜ.,விவசாயிகளுக்கு எதிரானவை!வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு

'சூப்பர் ஹிட்' கூட்டணி!

பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் சுஷில் மோடி மீது, ஊழல் புகார்கள் எதுவும் இல்லை. இந்திய கிரிக்கெட் அணியில், துவக்க ஜோடியாக களமிறங்கும் சச்சின் மற்றும் சேவாக்கை போல், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி, 'சூப்பர் ஹிட்' கூட்டணியாகும்.

ராஜ்நாத் சிங்

ராணுவ அமைச்சர், பா.ஜ.,

விவசாயிகளுக்கு எதிரானவை!

வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிரானவை. உ.பி.,யின் பல பகுதிகளில், ரூ.1,868க்கு விற்கப்படவேண்டிய ஒரு குவின்டால் நெல்லை, ரூ.1,000க்கு விற்க, விவசாயிகள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாவிட்டால், என்ன நடக்கும் என சிந்தியுங்கள்.

பிரியங்கா

பொதுச் செயலர், காங்.,

விரிவான நடவடிக்கை தேவை!

ஜம்மு - காஷ்மீர் போலீசார், சட்டம் - ஒழுங்கை பராமரித்து, தீவிரவாதிகளை சிறந்த முறையில் ஒடுக்கி வருகின்றனர். எனினும், இளைஞர்களை மூளைச் சலவை செய்ய, தீவிரவாதிகள் எடுக்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். அதற்கு, விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மனோஜ் சின்ஹா

துணை நிலை கவர்னர், ஜம்மு - காஷ்மீர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-அக்-202003:57:28 IST Report Abuse
J.V. Iyer செல்லாத ஊருக்கு வழிகேட்பதில் பிரியங்கா வல்லவர். ஊழலின் மொத்த உருவமான வாத்ராவின் மனைவி இவருக்கு அரசியல் பேச ஊழல் நேரு குடும்ப உறுப்பினர் என்ற தகுதியைதவிர வேறு என்ன தகுதி இருக்கிறது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X