பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., நினைவிடம் திறக்கும் வி.ஐ.பி., யார்?

Updated : அக் 23, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை : ஜெயலலிதா நினைவிடத்தை, நவம்பர் இறுதியில் திறக்கும் வகையில், தமிழக அரசு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. டில்லி வி.ஐ.பி., ஒருவரை வைத்து, நினைவு மண்டபத்தை திறக்க, திட்டமிடப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, சென்னை மெரினாவில், 58 கோடி ரூபாய் மதிப்பில், நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஜெ., உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பீனிக்ஸ் பறவை வடிவ
ஜெ., நினைவிடம் திறக்கும் வி.ஐ.பி., யார்?

சென்னை : ஜெயலலிதா நினைவிடத்தை, நவம்பர் இறுதியில் திறக்கும் வகையில், தமிழக அரசு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. டில்லி வி.ஐ.பி., ஒருவரை வைத்து, நினைவு
மண்டபத்தை திறக்க, திட்டமிடப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, சென்னை மெரினாவில், 58 கோடி ரூபாய் மதிப்பில், நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஜெ., உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடம் கட்டப்படுகிறது.சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் வடிவமைத்து கொடுத்த தொழில்நுட்பத்தின்படி, இந்த கட்டடம் முழுதும், கான்கிரீட் கலவையை பயன்படுத்தி, கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, கட்டுமான சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.

தற்போது, கான்கிரீட் போடப்பட்ட கட்டடத்தில் இருந்து, சென்ட்ரிங் கம்பிகளை பிரித்து எடுக்கும் பணி துவங்கியுள்ளது.ஒரு வாரத்தில் இப்பணிகள் முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நினைவிடத்தை, நவம்பர் இறுதியில் திறக்க, முதல்வர் இ.பி.எஸ்., திட்டமிட்டுள்ளார். இந்த விழாவில் பங்கேற்க வரும்படி, டில்லியில் உள்ள முக்கிய பிரமுகருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவரும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.அதற்கேற்ப, சென்ட்ரிங் பிரிப்பு பணிகள் முடிந்ததும், நினைவிடத்தின் உட்புற அலங்காரம் உள்ளிட்ட பணிகளை வேகப்படுத்த, பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.



Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26-அக்-202009:15:59 IST Report Abuse
skv srinivasankrishnaveni அதாயிருக்காளேடா உங்கள்குலதெய்வநாயகி சசிகலா
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26-அக்-202009:10:49 IST Report Abuse
skv srinivasankrishnaveni திமுகவொ கேக்கவே வேண்டாம் தமிழ்நாடு நாசமாப்போனதுக்கே காரணம் இந்த சாதிவெறிபிடிச்சவாலிதாண்டாகாரணம் எல்லோரும் சேர்ந்துக் கல்வியிலே கைவச்சானுக அவனால் ஒரு யுனிவர்சிட்டி ஒப்பேன் பண்ணான் கொடியே துள்ளி விளையாடுறானுக திராவிடம்பேசியே மக்களை கூறுபோட்டுட்டு இன்று நீதியும் நியாயமும் பேசிண்டு நிறுத்துங்க இந்தகூடிடம்
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
24-அக்-202017:37:14 IST Report Abuse
Ellamman ஊழல் ... வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இவருடன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கி குற்றம் நடந்து என்று தீர்ப்பாகி உள்ள நிலையில்....நாட்டின் அரசு அதிகாரத்தில் உள்ள முக்கிய தலைவர் யாரும் இந்த திறப்பு விழாவிற்கு வரக்கூடாது. அது தார்மீகம்... மீறி வந்தால் ஊழலுக்கு துணை போனவர் என்ற அவச்சொல்லுக்கு நிச்சயம் ஆளாக நேரிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X