திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் முயற்சியாக போலீசார் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் 35 க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் வட்டார வாரியாக போலீஸ் குடியிருப்புகள் உள்ளன. பொதுவாக ஸ்டேஷன்களில் உள்ள அறைகளில் பழைய, காலாவதியான ஆவணங்கள் பலவும் நிறைந்திருந்தன. அதேபோல பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இடத்தை அடைத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. தற்போது அறைகளில் இருந்த தேவையற்ற ஆவணங்களை காகித ஆலைக்கு விற்று, புதிய காகிதங்களை பெற்றனர்.
வாகனங்களில் உரிமைக் கோரப்படாதவற்றை போலீஸார் ஏலம் மூலமாக விற்று வருவாய் ஈட்டியுள்ளனர்.அத்துடன் நில்லாமல் வளாகங்களை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் முயற்சியாகவும் அந்தந்த ஸ்டேஷன் மற்றும் போலீஸ் குடியிருப்பு வளாகங்களில் மரக்கன்றுகளை நட அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி வளாகத்தை சுற்றிலும் குறைந்தது தலா 5 மரக்கன்றுகள் வீதம் மாவட்டம் முழுவதும் பலநுாறு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். வருகின்ற காலம் மழைக்காலம் என்பதனால் இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி., அலுவலக போலீஸார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE