பொது செய்தி

தமிழ்நாடு

5 ஏக்கரில் சீரக சம்பா நெல் சாகுபடி திருச்சி பெண் விவசாயி சாதனை முயற்சி

Added : அக் 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருச்சி:திருச்சி, மண்ணச்சநல்லுார் பகுதியில், பெண் விவசாயி ஒருவர், சாதனை முயற்சியாக, 5 ஏக்கரில் சீரக சம்பா நெல் சாகுபடி செய்துள்ளார்.தேவை அதிகரிப்பு மற்றும் உணவு பழக்க வழக்கம் மாறி வருவதை கருத்தில் கொண்டு, திருச்சி, மண்ணச்சநல்லுார் பகுதி விவசாயிகள், பொன்னி மட்டுமின்றி, பாரம்பரிய கவுனி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா போன்ற நெல் ரகங்களையும் சாகுபடி செய்யத் துவங்கி
 5 ஏக்கரில் சீரக சம்பா நெல் சாகுபடி திருச்சி பெண் விவசாயி சாதனை முயற்சி

திருச்சி:திருச்சி, மண்ணச்சநல்லுார் பகுதியில், பெண் விவசாயி ஒருவர், சாதனை முயற்சியாக, 5 ஏக்கரில் சீரக சம்பா நெல் சாகுபடி செய்துள்ளார்.

தேவை அதிகரிப்பு மற்றும் உணவு பழக்க வழக்கம் மாறி வருவதை கருத்தில் கொண்டு, திருச்சி, மண்ணச்சநல்லுார் பகுதி விவசாயிகள், பொன்னி மட்டுமின்றி, பாரம்பரிய கவுனி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா போன்ற நெல் ரகங்களையும் சாகுபடி செய்யத் துவங்கி உள்ளனர்.


சோதனை முறை

பச்சமலை அடிவாரப் பகுதியில், அதிகம் பயிர் செய்யப்படும் சீரக சம்பா அரிசி ரகத்தை, பிச்சாண்டார் கோவில் கிராமத்தில், சுபத்ரா என்ற பெண், முதல் முறையாக, 5 ஏக்கரில் சமவெளி பகுதியில் சாகுபடி செய்துள்ளார். சுபத்ரா கூறியதாவது:

கடந்த, மூன்று ஆண்டுகளாக, சோதனை முறையில், குறைவான பரப்பில் சீரக சம்பா மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்தேன்.இந்த ஆண்டு, வேளாண் துறை அலுவலர்கள் உதவியுடன், ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்து, இயற்கை முறையில், 5 ஏக்கரில் சீரக சம்பா நெல் ரகத்தை மட்டும் சாகுபடி செய்துள்ளேன்.

எந்த வகையான உரங்கள் பயன்படுத்தினாலும், சீரக சம்பா அரிசியின் தன்மையில் மாற்றம் இருக்காது. பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் இந்த அரிசிக்கு, தேவை அதிகரித்து இருப்பதாலும், நல்ல விலை கிடைக்கும் என்ப தாலும், இந்த ரகத்தை சாகுபடி செய்துள்ளேன்.மகசூல்மற்ற நெல் ரகங்கள், ஏக்கருக்கு, 60 கிலோ எடையில், 40 முதல் 45 மூட்டை மகசூல் கிடைக்கும்.

இந்த ரகத்தில், 30 மூட்டை தான் மகசூல் கிடைக்கும் என்றாலும், ஒரு மூட்டைக்கு, 3,000 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.இவரது வயலில் பயிரிடப்பட்டுள்ள சீரக சம்பா பயிர்களை, கலெக்டர் சிவராஜ் மற்றும்வேளாண்மை துறைஅதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukumar - TIRUPPUR,இந்தியா
22-அக்-202009:42:14 IST Report Abuse
Muthukumar நல்ல முயற்சி ...வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-அக்-202003:58:59 IST Report Abuse
J.V. Iyer உங்கள் முயற்சி வெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மணி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X