கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடரும்| Dinamalar

'கிரே' பட்டியலில் பாகிஸ்தான் தொடரும்

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (7)
Share
இஸ்லாமாபாத் : பயங்கரவாதத்துக்கு நிதி உதவி பண மோசடி தொடர்பாக எப்.ஏ.டி.எப். எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் 'கிரே' எனப்படும் மோசமான நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வாய்ப்பில்லை என்று தெரிகிறது.ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசை தலைமையிடமாக வைத்து செயல்படும் எப்.ஏ.டி.எப். அமைப்பு சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுக்கவும் பண
Pakistan, Gray List, FATF, பாகிஸ்தான், கிரே பட்டியல்

இஸ்லாமாபாத் : பயங்கரவாதத்துக்கு நிதி உதவி பண மோசடி தொடர்பாக எப்.ஏ.டி.எப். எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் 'கிரே' எனப்படும் மோசமான நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசை தலைமையிடமாக வைத்து செயல்படும் எப்.ஏ.டி.எப். அமைப்பு சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுக்கவும் பண மோசடிகளை தடுக்கவும் அந்தந்த நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இதன் 'கிரே' எனப்படும் மோசமான நாடுகள் பட்டியலில் இடம் பெறும் நாடுகளுக்கு உலக வங்கி சர்வதேச நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் நிதி உதவி கிடைக்காது. பாகிஸ்தான் கடந்த 2018 ஜூனில் இருந்து 'கிரே' பட்டியலில் இடம்பெற்று வருகிறது. இந்தப் பட்டியலில் இருந்து வெளியேறுவதற்கு எப்.ஏ.டி.எப். அமைப்பு 27 செயல்திட்டம் கொடுத்திருந்தது. ஆனால் அதில் முக்கியமான செயல் திட்டங்களை பாகிஸ்தான் செயல்படுத்தவில்லை.


latest tamil news


இந்த நிலையில் எப்.ஏ.டி.எப். அமைப்பின் மூன்று நாள் கூட்டம் நேற்று துவங்கியுள்ளது. அதில் பாகிஸ்தானின் நிலைமை குறித்து ஆராயப்பட உள்ளது.'முக்கியமான நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றாததால் 'கிரே' நிற பட்டியலில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு இல்லை' என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

'அதே நேரத்தில் பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மிகவும் மோசமான நாடுகள் என்ற கருப்புப் பட்டியலில் இடம்பெறாது. ஆனால் கிரே நிற பட்டியலில் தொடரும்' என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜூனில் பாகிஸ்தான் கிரே நிற பட்டியலில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X