பொது செய்தி

இந்தியா

பிரசாரங்களில் நெறிமுறை மீறல்; தேர்தல் கமிஷன் கவலை

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : தேர்தல் பிரசாரங்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில், முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளி பின்பற்றுவது போன்ற நெறிமுறைகள் முற்றிலு மாக மீறப்படுவதாக தேர்தல் கமிஷன் கவலை தெரிவித்துள்ளது.பீஹார் சட்டசபை தேர்தல் அக்., 28ல் துவங்கி மூன்று கட்டங்களாக நடக்கிறது. மேலும் ம.பி. உள்ளிட்ட சில மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு
Election Commission, Bihar election,EC,

புதுடில்லி : தேர்தல் பிரசாரங்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில், முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளி பின்பற்றுவது போன்ற நெறிமுறைகள் முற்றிலு மாக மீறப்படுவதாக தேர்தல் கமிஷன் கவலை தெரிவித்துள்ளது.

பீஹார் சட்டசபை தேர்தல் அக்., 28ல் துவங்கி மூன்று கட்டங்களாக நடக்கிறது. மேலும் ம.பி. உள்ளிட்ட சில மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக் கின்றன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அப்போது அரசுவகுத்துள்ள கொரோனா தடுப்பு நெறிமுறைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


latest tamil news


இது குறித்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி தலைவர்கள் பொது செயலர்களுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது. அதன் விபரம்: தேர்தல் பிரசாரம் மற்றும் பொதுக் கூட்டங்களின் போது மக்கள் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றுகிறார்களா என்பதை அரசியல் கட்சிகளும் வேட்பாளர் களும் அதீத அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும்.

கூட்டங்களில் ஒழுக்கத்தை பின்பற்றாத அரசியல் கட்சியின் வேட்பாளர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
22-அக்-202016:15:14 IST Report Abuse
Sampath Kumar ஐயோ பாவம் கமீஸின் எதுக்கு எதுக்கு எல்லாம் கவலை படுது பாருங்க மக்களே ஆனால் பழைய முறை கொண்டுவாங்க என்றால் அதுக்கு மட்டும் நஹி நஹி சொல்லுது
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
22-அக்-202016:11:59 IST Report Abuse
Mirthika Sathiamoorthi இதென்ன பிரமாதம் தேர்தலின் போது தான் எவ்வளவு கள்ளப்பணம் வேலை செய்யுதுண்ணே தெரியும்...கள்ளப்பணம் ஒழிக்கப்பாடுபடும் கட்சிகள் எல்லாம் இந்த விஷயத்தில் கள்ளப்பணத்தை பத்தி கண்டுக்கவே கண்டுக்காது...ஏன்ன முனிசிபாலிட்டி பஞ்சாயத்து ஒன்றியத்துக்கு கவுன்சிலருக்கு MLA க்கு MP க்குன்னு இந்த பதவிக்கு இவ்வளவுன்னு செலவு செஞ்சாதானே ஜெயிக்கவே முடியும்... நெஞ்சுல கைவெச்சு சொல்லச்சொல்லுங்க இந்த கள்ளப்பணதுக்கு எதிராய் குரல் கொடுக்கும் கட்சிகள் ஏதாச்சும் தேர்தல் கமிஷன் நிர்ணயித்த தேர்தல் செலவு தொகையில் செலவு செய்து ஜெயிக்கமுடியும்ன்னு? நம்மூரின் மொத்த கருப்புப்பணமும் இதுக்குதான் தேவையே...அதனாலதானே நாலு கார்பரேட்டுக்கு மட்டும் தொடர்ந்து அரசு டெண்டர்...கட்சிநிதியெல்லாம்..யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ளே மறச்சு வையுங்க...கட்சியெல்லாம் நேர்மையாதான் தேர்தலை சந்திக்குதுன்னு சொன்ன அவன் கண்டிப்பா செவ்வாய்கிரகத்தை சேர்ந்தவனா இருப்பான்... இதுல அந்த கட்சி ஊழல் இந்தக்கட்சி ஊழல்ன்னு காமெடிவேற...
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
22-அக்-202008:32:03 IST Report Abuse
VENKATASUBRAMANIAN ஒன்றும் செய்ய முடியாது. தேர்தலை மட்டும் ஒத்தி வைக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X