புதுடில்லி :“பொருளாதார மறுமலர்ச்சியின் மிக அருகில் நாம் இருக்கிறோம்,” என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
டில்லியில், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றுப் பேசிய ரிசர்வ வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், கூறியதாவது: பொருளாதார மறுமலர்ச்சியின் மிக அருகில் நாம் இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சிக்கு, நிதி நிறுவனங்கள், போதுமான மூலதனம் வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.

கொரோனா வைரசால் ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்ள, நிதி விரிவாக்க திட்டத்தை, இந்தியா பின்பற்றியது. கொரோனாவுக்குப் பின், இந்தியா பின்பற்றவேண்டிய நிதி சார்ந்த திட்ட வரைபடத்தை, மத்திய அரசு வகுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE