மீனவர்களின் பாதுகாவலர் மோடி: பா.ஜ., தலைவர் முருகன்

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை : ''மத்தியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், இந்திய மீனவர்கள் மீது, ஒரு தாக்குதலும் கிடையாது. மீனவ சமுதாயத்தின் பாதுகாவலராக, பிரதமர் நரேந்திரமோடி உள்ளார்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.தமிழக, பா.ஜ., மீனவர் அணி செயற்குழு கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. மீனவர் அணித் தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் முருகன் பேசியதாவது: மீனவர்களுக்காக,
BJP, Murugan, Modi, பாஜ, முருகன்,மோடி

சென்னை : ''மத்தியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், இந்திய மீனவர்கள் மீது, ஒரு தாக்குதலும் கிடையாது. மீனவ சமுதாயத்தின் பாதுகாவலராக, பிரதமர் நரேந்திரமோடி உள்ளார்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.

தமிழக, பா.ஜ., மீனவர் அணி செயற்குழு கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. மீனவர் அணித் தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் முருகன் பேசியதாவது: மீனவர்களுக்காக, பா.ஜ., சார்பில், 2014க்கு முன், பல போராட்டங்களை நடத்தினோம். மத்தியில் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், இன்று வரை, இந்திய மீனவர்கள் மீது, ஒரு தாக்குதலும் கிடையாது.


latest tamil news


மீனவர்கள் சமுதாயத்தின் பாதுகாவலராக, பிரதமர் உள்ளார். பா.ஜ., ஆட்சிக்கு வரும் முன், தினமும் துப்பாக்கி சூடு நடந்தது. மீனவர்கள் பரிதாபமாக இறந்தனர். தற்போது, அவை தடுத்து நிறுத்தப்பட்டுஉள்ளன.தமிழகத்தில், பா.ஜ., இல்லாத அரசியல் இல்லை என்ற நிலை உள்ளது. நம் எண்ணம் எல்லாமே ஒன்றுதான். நமக்கு நாட்கள் மிகவும் குறைவு. சட்டசபை தேர்தலுக்கு, நான்கு மாதங்களே உள்ளன. ஒவ்வொருவருக்கும் மத்திய அரசின் திட்டம் போய் சேர்ந்துள்ளது.

நாம் பயனாளிகளை அடையாளம் கண்டு, மத்தியஅரசின் திட்டத்தில் பெற்ற பயன்களை தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில், பா.ஜ., மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; தேசிய ஜனநாயக கூட்டணி தான், ஆட்சியை பிடிக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uma Kumar - Madurai ,யூ.எஸ்.ஏ
22-அக்-202022:46:36 IST Report Abuse
Uma Kumar Jai Hind, Jai Modiji
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-அக்-202017:58:19 IST Report Abuse
Endrum Indian ஐயோ ஐயோ அப்போ மீனவர்கள் ஒட்டு அவுட்டா சுடலை ஜோசப் கானுக்கு
Rate this:
Cancel
22-அக்-202016:04:22 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) மோடிஜி ஆட்சியில் அனைத்து பிரிவினருக்கும் நல்லதே நடக்கும் மீனவர் பிரிவும் இதில் அடக்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X