கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஐ.ஏ.எஸ்., பணி கோரிய வழக்கு: தீர்ப்பாயம் உத்தரவு

Added : அக் 22, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: 'சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றோருக்கான பணி ஒதுக்கீடு, வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது' என, ஐ.ஏ.எஸ்., பணி ஒதுக்கக் கோரி, பார்வை குறைபாடு உடைய பெண் தாக்கல் செய்த வழக்கில், மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த பூரணசுந்தரி, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு: நான், பார்வை குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி. 2019ல்
IAS, Civil Service Exams, பூரணசுந்தரி

சென்னை: 'சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றோருக்கான பணி ஒதுக்கீடு, வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது' என, ஐ.ஏ.எஸ்., பணி ஒதுக்கக் கோரி, பார்வை குறைபாடு உடைய பெண் தாக்கல் செய்த வழக்கில், மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பூரணசுந்தரி, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு: நான், பார்வை குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி. 2019ல் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில், 286வது இடம் பெற்றிருந்தேன். எனக்கு வருமான வரித் துறையில், பணி ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் சட்டப்படி, பார்வை திறன் குறைபாடு உடையவர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., பணி ஒதுக்கீட்டில் வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டை, முறையாக பின்பற்றவில்லை.

இடஒதுக்கீட்டை முறையாக மேற்கொள்ளாமல் செய்யப்பட்ட பணி நியமன ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். புதிதாக பணி நியமன ஒதுக்கீடு செய்து, எனக்கு ஐ.ஏ.எஸ்., பணி வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டது.


latest tamil news


இந்த மனு, மத்திய நிர்வாக தீர்ப்பாய நீதித் துறை உறுப்பினர் எஸ்.என்.டெர்டல் மற்றும் நிர்வாக உறுப்பினர் சி.வி.சங்கர் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர்கள் கண்ணன், பாஸ்கர் மதுரம் வாதாடினர்.

விசாரித்த உறுப்பினர்கள், மனுவுக்கு பதில் அளிக்குமாறு, மத்திய பணியாளர் துறை செயலர் மற்றும் யு.பி.எஸ்.சி., கமிஷனுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், '2019 சிவில் சர்வீசஸ் தேர்வின்படி வழங்கப்பட்ட நியமன ஒதுக்கீடு, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது' என, இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். வழக்கை, 2021 ஜனவரிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
22-அக்-202015:49:57 IST Report Abuse
r.sundaram இதில் விசாரிக்க நிறைய விஷயங்கள் உள்ளன. இவருக்கு கலெக்டர் பனி கொடுத்தால் அதை திறம்பட செய்ய முடியுமா? புயல் மழை என்று மக்களுக்கு உதவ வேண்டி வரும் போது பார்வை முக்கியம். இந்த மாதிரி சமயங்களில் இவர் ஏமாற்றப்பட சாத்தியங்கள் உண்டு. ஆனால் தனி மனிதர் பார்வையற்றவர் என்ற போர்வையில் அவர் தப்பித்துக்கொள்ள முடியும். ஆனால் அதனால் அரசாங்கத்துக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு யார் பொறுப்பேற்பது. கலெக்டரிடம் மனு தர வருபவர்களை பார்வையிலேயே எடைபோட முடியும். இவரால்? ஆனால் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம் எண்கள் நாட்டில் பார்வையற்றவருக்கு கூட கலெக்டர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்று. ஆனால் அதனால் நஷ்டப்படப்போவது அவர் அல்ல, அரசாங்கம்.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
22-அக்-202015:17:55 IST Report Abuse
Murthy இது மோசமான முன்னுதாரணம்...
Rate this:
Cancel
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
22-அக்-202011:41:15 IST Report Abuse
Lawrence Ron பார்வையற்ற ஒருவருக்கு கேரளாவில் மாவட்ட ஆடசியர் பணிநியமனம் கிடைத்ததே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X