சென்னை: ''மக்கள் அழைத்தால், விஜய் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறும்,'' என, நடிகர் மற்றும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
குஷ்பு, ஆர்.கே.சுரேஷ், நமீதா உள்ளிட்ட திரையுலகினர் பலர், பா.ஜ.,வில் இணைந்தனர். அடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகர், வடிவேலு உள்ளிட்டோர், பா.ஜ.,வில் இணையப் போவதாக தகவல் பரவியது.

இது குறித்து, எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது: எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது; அதை வலுப்படுத்தி வருகிறேன். அதில் தான், முழு கவனமும் இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம், தேவைப்படும் போது, மக்கள் விருப்பப்பட்டு அழைக்கும் போது, அரசியல் கட்சியாக மாறும். நாங்கள், மக்களை அழைப்பதை விட, மக்கள், எங்களை அழைக்க வேண்டும். அது தான், 'பவர்புல்'லாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE