பிரதமர் அலுவலக தகவல்களை பெற உளவாளிக்கு பணி கொடுத்தது அம்பலம்

Added : அக் 22, 2020 | கருத்துகள் (14)
Advertisement
புதுடில்லி: கடந்த மாதம் கைது செய்யப்பட்ட சீன பெண் உளவாளிக்கு, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் குறித்த ரகசிய தகவல்களை பெற்றுத் தர, பணி கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.டில்லியைச் சேர்ந்த, பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, கடந்த மாதம், சிறப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். சீன உளவுத் துறைக்கு, அவர் ரகசிய தகவல்களை பகிர்ந்து வந்தது
Espionage case, PM Office, Chinese spy radar

புதுடில்லி: கடந்த மாதம் கைது செய்யப்பட்ட சீன பெண் உளவாளிக்கு, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் குறித்த ரகசிய தகவல்களை பெற்றுத் தர, பணி கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த, பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, கடந்த மாதம், சிறப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். சீன உளவுத் துறைக்கு, அவர் ரகசிய தகவல்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவல்களுக்காக, அவருக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டதும் தெரியவந்தது.

இதில் தொடர்புடைய, குயிங் ஷி என்ற சீன பெண்ணும், ஷெர் சிங் என்ற நேபாள நபரும், அப்போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடம், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த சில முக்கிய தகவல்கள், தற்போது வெளியாகி உள்ளன.பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய மத்திய அரசு அலுவலகங்கள் குறித்த ரகசிய தகவல்களை சேகரித்து கொடுக்க, இந்த உளவுக் குழுவுக்கு, பணி கொடுக்கப்பட்டிருந்தது.


latest tamil news


மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் மூத்த அதிகாரிகள் குறித்த தகவல்களும், சீன பெண்ணான குயிங் ஷியிடம் கோரப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்டுள்ள குயிங் ஷி, போதி கயா கோவிலின் சீன துறவி ஒருவர் வாயிலாக, கோல்கட்டாவை சேர்ந்த செல்வாக்குமிக்க பெண் ஒருவருக்கு, அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த கோல்கட்டா பெண் யார் என்பதை கண்டறியும் முயற்சியில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்த கோல்கட்டா பெண், குயிங் ஷிக்கு, சில ஆவணங்களை வழங்கி இருக்கிறார். சீன மொழியில் உள்ள அந்த ஆவணங்களை மொழிபெயர்த்து கொடுக்க, குயிங் ஷிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரின் மனைவி டிங் என்பவருக்கும், சோவ் என்பவருக்கும் அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
22-அக்-202020:11:48 IST Report Abuse
dina யிந்த உளவாளிகளால் நாட்டுக்கு பெரும் ஆபத்து. வீசாரணை முடுக்கிவிடவேண்டும்.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
22-அக்-202018:18:47 IST Report Abuse
Loganathaiyyan தவறு கண்டேன் விசாரணை செய்தேன் இன்னும் தெரிந்து கொண்டேன் சுட்டேன் எல்லாம் 3 நாளில் நடந்தால் தான் இதன் தாக்கம் உடனே குறையும் இல்லே தீவிரவாத மனித உரிமை கழகம் இதில் உள்ளே நுழைந்து காரியத்தை கெடுக்கும் ஜாக்கிரதை
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
22-அக்-202016:04:19 IST Report Abuse
Baskar இதே போல் தான் ஸ்டாலினும் மத்திய அரசிலும் கவர்னர் மாளிகையில் தமிழக அரசு அலுவலகங்களிலும் நீதிமன்றத்திலும் குறிப்பிட்ட நபர்களை வைத்து இருக்கிறார். அதனால் தான் உடனுக்குடன் செய்திகள் அவருக்கு கிடைக்கின்றன. இதற்க்கு அரசாங்கம் சம்பளம் போதாக்குறைக்கு இவர் கொடுக்கும் கிம்பளம் வேறு. ஆக ஒற்றையர் எங்கும் உள்ளனர் ஸ்டாலினுக்கும் சீனாவுக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X