பொது செய்தி

இந்தியா

"எந்த வழிமுறையா இருந்தா என்ன, காசு வருதா புகழ் வருதா... அது போதும்...

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
திராவிட இயக்கங்கள் பொய்களின் அடிப்படையில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆரியப் படையெடுப்பு என்பதே கட்டுக்கதை. அது போல் தான் ஆலயப் பிரவேசம். ஹிந்து விரோத, இந்திய விரோதிகளின் முகத்திரை முழுதுமாக கிழிக்கப்பட வேண்டும் - பா.ஜ., பிரமுகர் எச்.ராஜா.'எந்த வழிமுறையா இருந்தா என்ன... காசு வருதா... ஒரே நிமிடத்தில் புகழ் வருதா... அது போதும் எங்களுக்கு... மனசாட்சியெல்லாம் பார்க்க
எச்.ராஜா, வைகைச்செல்வன்

திராவிட இயக்கங்கள் பொய்களின் அடிப்படையில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆரியப் படையெடுப்பு என்பதே கட்டுக்கதை. அது போல் தான் ஆலயப் பிரவேசம். ஹிந்து விரோத, இந்திய விரோதிகளின் முகத்திரை முழுதுமாக கிழிக்கப்பட வேண்டும்
- பா.ஜ., பிரமுகர் எச்.ராஜா.


'எந்த வழிமுறையா இருந்தா என்ன... காசு வருதா... ஒரே நிமிடத்தில் புகழ் வருதா... அது போதும் எங்களுக்கு... மனசாட்சியெல்லாம் பார்க்க மாட்டோம்...' என்ற ரீதியில் சிலர் செயல்படுகையில், பா.ஜ., பிரமுகர் எச்.ராஜா அறிக்கை.'அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா, நீ யாரப்பா?' என, தமிழக அரசு முன்னரே கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு கேட்டிருந்தால், தன்னிச்சையாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்துகிறேன் என, அவர் செயல்பட்டிருக்க மாட்டார்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன்.


'நாங்களும் வாழ மாட்டோம்; மத்தவங்களையும் வாழ விட மாட்டோம்' என்ற நவீன கால சொற்றொடரை நினைவுபடுத்தும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் அறிக்கை.இலங்கையில் நடந்த, உச்சகட்டப் போரின்போது ஏற்பட்ட இனப் படுகொலையை, மத்திய அரசில், காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து பங்கெடுத்த, தி.மு.க., நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். தமிழினத்தை காப்பாற்ற வந்தவர்கள் போல, தி.மு.க., நினைக்கிறது. இவர்களை கண்டிக்க, இங்கு ஒரு ஆள் கூட இல்லையா?
- அ.தி.மு.க., வைகைச்செல்வன்


அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அறிக்கை.இ.பி.எஸ்., அரசின் அலட்சியத்தாலும், நிர்வாக திறமையின்மையாலும், டெல்டா மாவட்டங்களில், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவது, மிகுந்த வேதனை அளிக்கிறது. முதல்வர் மெத்தனத்தால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
- அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்.


latest tamil news

'ஊரெல்லாம் நெய்யே, என் பெண்டாட்டி கையே...' என்ற ரீதியில் தமிழகத்தில் உள்ள சொத்தை எல்லாம் வளைத்துப் போடுவதில் மட்டும் குறியாய் இருந்து, மக்களை கவனிக்காமல் விட வைத்த பரம்பரையை நினைவுபடுத்தி, 'களுக்...' என, சிரிப்பை ஏற்படுத்தும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை.மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார், பொருந்தாத வாதங்களின் அடிப்படையில், அடிக்கடி கருத்துகளைக் கூறி, நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து வருகிறார். ஆதாரமற்ற அவதுாறு கருத்தைக் கூறி வருகிறார். இந்த கூட்டணி ஒரு கொள்கைக் கூட்டணி. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை போல சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல
- தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி.


'இதுக்கு போயி அலட்டிக்கலாமா...' என்ற பாடலை நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை.நடிகை குஷ்பு, பா.ஜ.,வில் இணைந்ததற்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அவர் கட்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு மிகப்பெரிய எழுச்சி உருவாகிஉள்ளது. இதை ஓட்டாக மாற்ற, அனைத்து நிர்வாகிகளும் பாடுபட்டு வருகின்றனர்
- தமிழக பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை.


'நல்லது நடந்தா சரி...' என எண்ணத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை பேட்டி.


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-அக்-202018:15:15 IST Report Abuse
Endrum Indian நீலவர்ண கட்டத்திலே இருக்கின்ற வாக்கியங்கள் நன்னா இருக்குன்னேன்
Rate this:
Cancel
kumaravel - chennai,இந்தியா
22-அக்-202017:22:00 IST Report Abuse
kumaravel திராவிட இயக்கங்கள் பொய்களின் அடிப்படையில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆரியப் படையெடுப்பு என்பதே கட்டுக்கதை. அது போல் தான் ஆலயப் பிரவேசம். ஹிந்து விரோத, இந்திய விரோதிகளின் முகத்திரை முழுதுமாக கிழிக்கப்பட வேண்டும்
Rate this:
Cancel
skandh - Chennai,இந்தியா
22-அக்-202010:12:43 IST Report Abuse
skandh ராஜா சார். ஒன்றைவிட்டுட்டீங்களே. ரெண்டு திருடர்கள் சேர்ந்து நடத்திய நாடகம்னு, இப்போது தான் அறிகிறோம்.அப்படின்னா நாங்கள் படித்ததெல்லாம் பொய்யா? DMK காலத்தில் கொண்டுவந்த எல்லா படிப்பையும் review பண்ணி உண்மை நிலையை அறிந்து மாற்றியமைக்க வேண்டும்.
Rate this:
skandh - Chennai,இந்தியா
22-அக்-202014:03:07 IST Report Abuse
skandhபடிக்காதவன்,அரைகுறை எப்படி அழைத்தால் எனக்கென்ன? முட்டாப்பசங்க .H ராஜா, சார் .மேத்தப்படித்தவர்.CHARTERED ACCOUNTANT....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X