பொது செய்தி

இந்தியா

ஐபோன் 12 புரோவை துபாயில் வாங்கி வந்தாலே இந்தியாவை விட செலவு குறைவு

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி : ஐபோன் 12 புரோவை துபாய் சென்று வாங்கி வரும் செலவு, இந்திய விலையை விட மலிவாகும் என தெரியவந்துள்ளது.ஆப்பிள் நிறுவனம் கடந்த 13ம் தேதி ஐபோன் 12 மினி, ஐபோன்12, ஐபோன் 12 புரோ மற்றும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் ஆகிய புது மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த நான்கு மாடல்களில், ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 புரோ மட்டுமே, தற்போதைக்கு இந்தியாவில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய
India, Iphone12Pro, Iphone12, Apple, Dubai, Tax,expensive, Money, ஐபோன், ஐபோன்12புரோ, ஆப்பிள், இந்தியா, துபாய்

புதுடில்லி : ஐபோன் 12 புரோவை துபாய் சென்று வாங்கி வரும் செலவு, இந்திய விலையை விட மலிவாகும் என தெரியவந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் கடந்த 13ம் தேதி ஐபோன் 12 மினி, ஐபோன்12, ஐபோன் 12 புரோ மற்றும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் ஆகிய புது மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த நான்கு மாடல்களில், ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 புரோ மட்டுமே, தற்போதைக்கு இந்தியாவில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மொபைல்போன்களை விற்பனையை அதிகரிக்க ஐபோன் 11 புரோ, ஐபோன் 12 புரோ மேக்ஸ் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது.
தற்போது விற்பனையில் உள்ள மொபைல்போன்களின் விலையையும் குறைத்துள்ளது. இந்தியாவில், ஐபோன் 12 மொபைல் போனின் விலை ரூ.69,900 ல் இருந்து துவங்குகிறது. மாடலுக்கு ஏற்ப விலை மாறுபடும். அதேபோல், ஐபோன் 12 புரோவின் விலை ரூ.1.19,900ல் இருந்து துவங்குகிறது.


latest tamil newsஇது முந்தைய மாடல்களை விட விலை அதிகமாகும். அதேபோல், ஐபோன் 12 புரோவின் விலை மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகம் என்பது இங்கே முக்கியமானதாகும். அதேநேரத்தில், துபாயில், இந்த மாடல் மொபைலின் விலை, இந்திய மதிப்பில் 84 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இதனால், துபாய்க்கு சென்று ஐபோன் 12 புரோவை வாங்கி திரும்பி வரும் செலவு, இந்திய விலையை விட குறைவாகவே உள்ளது.

எவ்வாறுஎனில், 128 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட ஐபோன் 12 புரோவின் இந்திய விலை ரூ.1,19,000.
துபாயில், இதே மொபைலின் விலை ரூ.84 ஆயிரம் ஆகும்.(இந்திய மதிப்பில்) துபாய் மதிப்பில் 4,199 திர்ஹாம் ஆகும். இதனை இந்திய ரூபாய் மதிப்புக்கு மாற்றும் போது ரூ.84 ஆயிரம் வரும்.

துபாயில், நவ., 6ம் தேதிக்கு பிறகு இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது. இதனால், துபாய்க்கு டில்லி அல்லது கோல்கட்டாவில் இருந்து சென்று வருவதற்கான ஏறத்தாழ ரூ.18 ஆயிரம் ஆகும்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், இண்டிகோ விமானத்தில் துபாய் சென்று வர ஆகும் செலவு : ரூ.17,929. சேமிப்பு திறன் 128 ஜிபி கொண்ட ஐபோன் 12 புரோவின் விலை: ரூ.84,000 மற்ற செலவு: ரூ.10 ஆயிரம் மொத்த செலவு: ரூ.1,11,929 ஆகும் .மிச்சமாகும் தொகை: ரூ.8,000

வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் மொபைல் போன்களுக்கான வரிகள் இந்தியாவில் அதிகமாகும். ஐபோன் 12 மாடல்களுக்கு, இந்தியாவில் வரியாக மட்டும் ரூ.24 ஆயிரம் செலுத்த வேண்டியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Praveen Klp - Gobichettipalayam,இந்தியா
22-அக்-202018:37:08 IST Report Abuse
Praveen Klp Stop buying in India for some time, then they reduce the price here only
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-அக்-202018:10:26 IST Report Abuse
Endrum Indian அப்போ இதை Smuggle பண்ணி பேக்கு பசங்களுக்கு அதாவது டாஸ்மாக் நாட்டு மக்களுக்கு விற்பது பற்றி கேரளாவில் உடனே நடவடிக்கை எடுப்பார்கள் சென்னை அங்கே தானே துபாய் கூட நல்ல சம்பந்தம் இருக்கு.
Rate this:
Cancel
22-அக்-202016:41:58 IST Report Abuse
Ganesan Madurai துபாயில் விற்க்கும் எந்த ஐபோன்களிலும் Face time கிடையாது. ஏனெனில் அது Etisalat அதாவது UAEயின் தொலைத்தொடர்பு துறையின் கொள்கைக்கு முராணாணதால் அங்கு Face time மற்ற WA call மற்றும் Skype போல தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இலவசமாக பேச உதவும் எந்த appம் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் UAE வாரண்டி இந்தியாவில் செல்லாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X