இலவச கொரோனா தடுப்பு மருந்து: பீஹாரில் பா.ஜ., வாக்குறுதி

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், இலவச கொரோனா தடுப்பூசி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.பீஹார் சட்டசபைக்கு அக். 23, நவ., 3 மற்றும் நவ.,7 ல் தேர்தல் நடைபெற உள்ளது. நவ.,10ல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. இதில் பாஜ., ஐக்கிய ஜனதாதளம் இணைந்து
Biharpolls, Nirmalasitharan, FMNirmala, Nirmala, FinanceMinisterNirmala, FInanceministerNirmalasitharaman, BJP, electionmanifesto, Bihar, Nitishkumar, CMNitishkumar, பீஹார் தேர்தல்,  நிர்மலா சீதாராமன், நிர்மலா, நிதியமைச்சர்நிர்மலா, நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன், பீஹார், பாஜ, பாரதியஜனதா, பா.ஜ., நிதிஷ்குமார், நிதிஷ், முதல்வர்நிதிஷ்குமார், நிதிஷ்குமார்,

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், இலவச கொரோனா தடுப்பூசி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.


latest tamil news
பீஹார் சட்டசபைக்கு அக். 23, நவ., 3 மற்றும் நவ.,7 ல் தேர்தல் நடைபெற உள்ளது. நவ.,10ல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. இதில் பாஜ., ஐக்கிய ஜனதாதளம் இணைந்து ஒரணியாகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள் ஆகியவை இணைந்து ஓரணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன. இதில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை ஏற்கனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டன.


latest tamil news
இந்நிலையில், இன்று பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், பீஹாரில் இலவச கொரோனா தடுப்பூசி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். மாநிலத்தை ஐடி மையமாக மாற்றப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.


latest tamil newsபின்னர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், அரசியல்ரீதியில் முக்கியமானவர்கள் நிறைந்த வாக்காளர்கள் உள்ள மாநிலம் பீஹார். கட்சிகள் வெளியிடும் வாக்குறுதிகளை மக்கள் நன்கு புரிந்து கொள்வோர்கள். எங்கள் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு உரிய பதில் அளிக்கப்படும். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவருகிறோம். தே.ஜ., கூட்டணி அரசில் பீஹாரின் ஜிடிபி உயர்ந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் மாநிலத்தின் ஜிடிபி 3 சதவீத்தில் இருந்து 11.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய காட்டாட்சியில் வளர்ச்சி பெறவில்லை. மக்களுக்கு சிறந்த நிர்வாகம் அளிக்க வேண்டும் என்பதில் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருவதால் மாநிலம் வளர்ச்சி பெறுகிறது.


latest tamil newsகொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் போது, பீஹாரில் அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்படும். தேர்தல் அறிக்கையில், இதனை தான் முதல் வாக்குறுதியாக அளித்துள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இதன் மூலம் நிதிஷ்குமார், அடுத்த 5 ஆண்டுகள் முதல்வராக இருப்பதுடன், அவரது ஆட்சியில், நாட்டிலேயே வளர்ச்சி பெற்ற மாநிலமாக பீஹார் மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Sothanai - NewYork,யூ.எஸ்.ஏ
23-அக்-202004:04:23 IST Report Abuse
Sathya Sothanai இது தேர்தல் விதிமீறல்........கேள்வி கேட்க யார் இருக்கா
Rate this:
Cancel
22-அக்-202021:02:30 IST Report Abuse
ஆப்பு இந்த தேர்தலுக்கு பிஹாரில் இலவசம். அடுத்த பொதுத் தேர்தலுக்கு இந்தியா முழுசுக்கும் இலவசத் தடுப்பூசி. போலியோ வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க 10 வருஷத்துக்கு மேலாச்சு. கொரோனா வைரசுக்கு அதே டைம் ஆகலாம். அதுக்கு மேலேயும் ஆகலாம். பொதுத் தேர்தலுக்கும் வாக்குறுதி செல்லும். கவலையே வேண்டாம்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-அக்-202022:08:17 IST Report Abuse
தமிழவேல் பல ப்ரோடோகால்களை நிறுத்திட்டாங்க. அதனால அடுத்த வருஷத்திலே எதிர்பார்க்க""லாம்"". ஆனால், இவங்க இஷ்டத்துக்கு வேண்டியவங்களுக்குன்னு குடுக்க முடியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X