மே.வங்க வளர்ச்சியில் மத்திய அரசு கவனம்: மோடி

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (3+ 1)
Share
Advertisement
புதுடில்லி: மேற்கு வங்கத்தின் வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை இன்று துவங்குகிறது. இதை முன்னிட்டு மாநில மக்களுக்கு 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வாழ்த்து கூறி அவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12:00 மணிக்கு உரையாற்றினார்.மோடி பேசியதாவது: மே.வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள்
DurgaPuja, Narendramodi, PmModi, Pmnarendramodi, துர்காபூஜை, பிரதமர் மோடி, பிரதமர் நரேந்திரமோடி,

புதுடில்லி: மேற்கு வங்கத்தின் வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை இன்று துவங்குகிறது. இதை முன்னிட்டு மாநில மக்களுக்கு 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வாழ்த்து கூறி அவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12:00 மணிக்கு உரையாற்றினார்.

மோடி பேசியதாவது: மே.வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் நாட்டுக்காக சுயநலமின்றி உழைத்தனர். இந்த மாநிலத்தை சேர்ந்த தியாகிகள், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தனர். இன்னும் சில சாதனையாளர்கள், இந்தியாவின் பாரம்பரியத்தை உலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்தியாவை, சர்வதேச அளவில் பெருமையடைய செய்தனர். இந்தியாவின் வளர்ச்சியில் மே.வங்கத்தினருக்கு முக்கிய பங்கு உள்ளது.

இந்த முறை கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் துர்கா பூஜையை கொண்டாடுகிறோம்.ஆனால், பண்டிகைக்கான உற்சாகம் குறையவில்லை. இந்த பூஜையில் பங்கேற்பது அதிர்ஷ்டம். மே.வங்க மக்களின் உற்சாகத்தை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. நமது மகள்கள் அனைவரையும் கடவுள் துர்கை போல் நடத்த வேண்டும். இந்தியாவின் பலம் மற்றும் ஒற்றுமையை உணர்த்தும் திருவிழாவாக துர்கா பூஜை உள்ளது. மேலும், இது மே.வங்கத்தின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை உணர்த்துகிறது.


latest tamil newsநமது விவசாயிகளுக்கு உதவுவதுடன, அவர்கள் அதிகாரம் பெற உதவ வேண்டும். சுதந்திரத்திற்கான நமது போராட்டத்தில் மே.வங்க மாநிலம் முன்னிலையில் இருந்தது. இந்தியா தன்னிறைவு பெறுவதை மே.வங்கம் உறுதி செய்யும். தன்னிறைவு இந்தியா இயக்கத்தில் மே.வங்க மாநிலம் முக்கிய பங்காற்றும். மத்திய அரசின் திட்டங்களால் 4 லட்சம் வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. கோல்கட்டா மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது.மே.வங்க வளர்ச்சிக்கு மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.கிழக்கு இந்தியா வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம். வளர்ச்சியின் புதிய பாதை நோக்கி மேற்கு வங்க மாநிலம் நகரும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமரின் உரையை, மாநிலத்தின் 294 சட்டசபை தொகுதிகளில் உள்ள 78 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 'பூத்'களிலும் ஒளிபரப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (3+ 1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
22-அக்-202018:53:50 IST Report Abuse
 Muruga Vel பெங்காலிகள் கடுமையான உழைப்பாளிகள் ..கட்டிட வேலையில் திறமையுள்ளவர்கள் ..நிறைய தொழிலதிபர்கள் கொல்கொத்தாவில் இருக்கிறார்கள் ... ஜோதிபாசுவும் மலேசிய மொகாத்திரும் இருபத்தைந்து ஆண்டுகள் ஒரே சமயத்தில் ஜோதி முதல்வராகவும் அவர் பிரதமராகவும் இருந்தார்கள் ..மலேசியா பெரிய தொழில் வளர்ச்சியை கண்டது . மேற்கு வங்கத்தில் இருந்து தொழில்கள் மற்ற மாநிலங்களுக்கு இடம் மாறின ..அடுத்து வந்த மம்தாவும் அதே ரகம் ..
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-அக்-202018:01:38 IST Report Abuse
Endrum Indian அய்யய்யோ இப்படி எல்லாம் (நைசாக) நைச்சியமாக பேசி முஸ்லீம் பேகம் மும்தாஜுக்கு ஆப்பு வைக்கக்கூடாது
Rate this:
Cancel
22-அக்-202016:27:26 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) மேட்கு வங்க மக்கள் நல்லவர்களை புரிந்து கொள்வார்கள் நல்ல ஆட்சி அமையும். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X