அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு சிலை: முதல்வர் திறப்பு

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜல்லிக்கட்டு சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ரூ.100 கோடி மதிப்பில் விரிவாக்கப்பட்ட ஐ.டி.சி தொழிற்சாலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த முதல்வர், தமிழர்களின் பாரம்பரிய
புதுக்கோட்டை, ஜல்லிக்கட்டு_சிலை, முதல்வர், பழனிசாமி, திறப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜல்லிக்கட்டு சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.


latest tamil news



புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ரூ.100 கோடி மதிப்பில் விரிவாக்கப்பட்ட ஐ.டி.சி தொழிற்சாலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த முதல்வர், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பிரதிபலிக்கும் விதமாக விராலிமலையில் அமைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




மாட்டு வண்டி பயணம்



latest tamil news


பின்னர், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக விவசாயிகள் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வுகளில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‛இந்திய அளவில் தமிழகம் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக உள்ளது என்றும், 55 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. புதுக்கோட்டை மக்களின் எதிர்ப்பார்ப்பான காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். கடந்தாண்டு மட்டும் புதுக்கோட்டையில் 110 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது,' எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-அக்-202021:27:52 IST Report Abuse
Ganesan Madurai 11 ஆயிரம் தமிழர்கள் ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேலை போனது. யாருக்கும் குறிப்பாக அரசுக்கு கவலை இல்லவேயில்லை. ஆனா இங்கு அரசுக்கு சிலைகள் வைப்பதுதான் ரொம்ப முக்கியம்.
Rate this:
Cancel
22-அக்-202021:25:37 IST Report Abuse
Ganesan Madurai அரசு பள்ளிகளின் தரத்தை ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெற மக்களிடமிருந்து கோடிக்கணக்கில் வரிவருமானம் பெற்றும் கேவலம் ரூ1500 கூட கொடுக்க முடியாத அரசு தண்டமாக சிலைகள் வச்சு இந்த நூற்றாண்டிலும் மக்களை ஏமாற்றுகிறது.
Rate this:
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
22-அக்-202019:55:35 IST Report Abuse
Rangiem N Annamalai இது தேவையற்ற செலவு. மக்களை போல் அரசும் செலவுகளுக்கு வரைமுறை வைக்க வைக்கவேண்டும். மளிகை சாமான்கள் அரிசியுடன் மக்களுக்கு கொடுத்து இருக்கலாம். தண்ணி பிரியாணி செலவு அதிகம் ஆகி கொண்டு உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X