பொது செய்தி

இந்தியா

கொரோனாவை வைத்து பா.ஜ., அரசியல் செய்கிறதா? : டிரெண்டிங்கில் காரசாரம்

Updated : அக் 23, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
பாட்னா: பீஹாரில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.வின் தேர்தல் அறிக்கையில் முதன்மையாக கொரோனா தடுப்பு ஊசி அனைவருக்கும் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் கருத்து பதிவிடுவதால் இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.பீஹார் சட்டசபைக்கு அக். 23, நவ., 3 மற்றும் நவ.,7 தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. பாஜ., ஐக்கிய ஜனதாதளம் இணைந்து மீண்டும்
NirmalaSitharaman, Bihar, Vaccine, BJP,

பாட்னா: பீஹாரில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.வின் தேர்தல் அறிக்கையில் முதன்மையாக கொரோனா தடுப்பு ஊசி அனைவருக்கும் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் கருத்து பதிவிடுவதால் இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

பீஹார் சட்டசபைக்கு அக். 23, நவ., 3 மற்றும் நவ.,7 தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. பாஜ., ஐக்கிய ஜனதாதளம் இணைந்து மீண்டும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பா.ஜ., இன்று(அக்., 23) தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இதனை வெளியிட்டார்.

தேர்தலில் முதல் வாக்குறுதியாக கொரோனா தடுப்பூசி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுப்பற்றி நிர்மலா கூறும்போது, ''கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதிகளவில் உற்பத்தியாகும் போது, பீஹாரில் அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்படும். அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்'' என்றார்.


latest tamil news




அவர் சொன்ன இந்த விஷயம் டுவிட்டரில் நெகட்டிவ்வாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ''பீஹாரில் பா.ஜ., வெற்றி பெற்றால் மட்டும் தான் கொரோனா தடுப்பு ஊசி இலவசமாக தருவீர்களா.?, ஒருவேளை தோற்றுவிட்டால் கொடுக்க மாட்டீர்களா, பணம் வாங்குவீர்களா.?, மற்ற மாநிலங்களுக்கு எதன் அடிப்படையில் கொரோனா ஊசி தருவீர்கள். இதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?, பீஹாரில் இருப்பவர்கள் மட்டும் இந்திய குடிமகன்கள் அல்ல, மற்ற மாநிலங்களில் இருப்பவர்களும் இந்திய குடிமகன்கள் தான். அப்படி இருக்கையில் பீஹாருக்கு மட்டும் இலவச தடுப்பூசி ஏன்...?'' என பலரும் டுவிட்டரில் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் ''கொரோனாவை வைத்தா பா.ஜ., அரசியல் செய்வது...'' என பொதுவாக பலரும் விமர்சித்து, பா.ஜ., மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #NirmalaSitharaman, #Bihar, #Vaccine, #BJP போன்ற ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
23-அக்-202014:30:24 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் கொரானா வை நாங்கள் ஒழித்திருப்போம் இதற்க்கு எல்லாம் காங்கிரஸ் தான் காரணம்
Rate this:
Cancel
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) இந்த சைனீஸ் பப்புவிற்கு இந்திய மக்களுக்கு நல்லது நடந்து விட கூடாது என்று கெட்ட புத்தி வெளியில் தெரிகிறது ???? அவனுக்கு பாக்கிஸ்தான் /சீனாவில் நடந்தால் குஷி ஆகுவான் ??? அங்கு இரவும் பகலுமாக உழைத்து கொண்டு இருக்கும் ஆராய்ச்சியாளர்களை கேவல படுத்தாத பித்துக்கூலி பப்பூவே .... எல்லோருக்கும் விரைவில் கிடைக்க வேண்டிய எண்ணம் தான் உன்னை மாதிரி சாடிஸ்ட்/நெகடிவ் எண்ணம் கிடையாது யார்க்கும் ????.
Rate this:
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
22-அக்-202018:48:05 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே டிரெண்டை உருவாக்குபவன் யார் என்று பார்த்தால் ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு எதுவும் செய்ய வக்கில்லாதவன், நாட்டை கொள்ளை அடித்தவன், தன்னையும் தன குடும்பத்தையும் மட்டுமே பார்த்துக் கொண்டவன். சீனா பாகிஸ்தான் இந்தியாவை தாக்கிய போது ஓடி ஒளிந்து கொண்டவன். இருநூறு ரூபாய் கொடுத்து மக்களை கெடுப்பவன். கேடுகெட்ட அயோக்கிய அரசியல் செய்பவன் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X