பொது செய்தி

இந்தியா

வெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: வெளிநாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் இந்தியா வர உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருவதற்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
India, VisaCurbsEased, OCI_Card_Holders, Visit_India, NotForTourism

புதுடில்லி: வெளிநாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் இந்தியா வர உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருவதற்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பெரும்பாலான சுற்றுலா தளங்கள் வருமானமின்றி முடங்கியது. மேலும், தொழில் நிமித்தமாக வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வருகை தராததால் பல தொழில்கள் முடங்கின. தற்போது பொருளாதார நடவடிக்கையாக கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


latest tamil news


இந்நிலையில் தற்போது உள்துறை அமைச்சகம் வெளிநாட்டவர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சுற்றுலா விசாக்களுக்கு மட்டும் அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது. சுற்றுலா விசா தவிர மற்ற விசாக்கள் மூலமாக இந்திய வம்சாவளியினர், இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இந்தியா வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
satia - Canberra,ஆஸ்திரேலியா
23-அக்-202005:06:43 IST Report Abuse
satia கொஞ்சம் விலாவரியாக செய்தி வெளியீட்டு இருக்கலாம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
22-அக்-202020:05:13 IST Report Abuse
Ramesh Sargam எப்பொழுதிலிருந்து வர அனுமதி??
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
22-அக்-202018:43:41 IST Report Abuse
S. Narayanan கட்டுப்பாடுகள் தேவைதான். ஆனால் தனிப்படுத்துதல் என்று சொல்லக்கூடாது. அவர்கள் எப்படி தனியாக அவ்வளவு நாட்கள் தனியாக தங்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X