அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி: முதல்வர்

Added : அக் 22, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டையில் அவர் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவு நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. அதிக விளைச்சல் காரணமாக, அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய முடியவில்லை. கடந்த ஆண்டு வரை 23 லட்சம்
தமிழகம், கொரோனா, தடுப்பூசி, முதல்வர், பழனிசாமி, முதல்வர்பழனிசாமி, இபிஎஸ்,

சென்னை: கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் அவர் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவு நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. அதிக விளைச்சல் காரணமாக, அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய முடியவில்லை. கடந்த ஆண்டு வரை 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் கூடுதல் பயன்பெறும் வகையில் தான் விவசாய சட்டங்கள் உள்ளன. விவசாய விளைபொருட்களை விற்பதில் வர்த்தகர்களுடன் ஒப்பந்தம் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம். விளைச்சல் அதிகரிக்கும்போது விவசாயிகள், வர்த்தகர்கள் குறிப்பிட்ட அளவு விளைபொருட்கள் கூடுதலாக இருப்பு வைத்து கொள்ளலாம். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு முழுக்க முழுக்க லாபம் தருவது தான் இந்த சட்டம். ஆனால், சில அமைப்புகள் விவசாய சட்டம் குறித்து தவறான தகவலை பரப்புகின்றன. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.


latest tamil news




கொரோனா வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த பின்னர் நிருபர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது: தொழில் முதலீடு குறித்து ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருகிறார். முதலீட்டாளர் மாநாட்டினால், எந்த தொழிலும் தமிழகத்திற்கு வரவில்லை என ஸ்டாலின் கூறுவது பொய். இந்தியாவில், விவசாயிகளுக்கு அதிகளவு இழப்பீட்டு தொகை பெற்று தந்தது அதிமுக அரசுதான். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை சார்பாக ஏராளமான பணிகள் நடந்துள்ளன. பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதுவரை சரி செய்யப்படாத சாலைகள் சீர் செய்யப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழக அரசின் செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
22-அக்-202023:32:32 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam நல்ல செய்தி.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
22-அக்-202021:36:11 IST Report Abuse
Ramesh Sargam இது தேர்தல் சமய வாக்குறுதி. மக்கள் இதுபோன்ற தேர்தல் சமய வாக்குறுதிகளை நம்பி ஏமாறாதீர்கள் உஷார்
Rate this:
Cancel
22-அக்-202019:05:10 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா மருந்தின் விலை என்னவென்று தெரிவதற்கு முன்னமே அதை இலவசமாக கொடுக்க முடிவெடுத்து உள்ளது வரவேற்க தக்கதல்ல. யார் அதை செய்தாலும் குற்றமே.
Rate this:
22-அக்-202021:32:54 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )அப்பிடியே விவசாயக்கடன் கல்விக்கடன் நகைக்கடன் தள்ளுபடி பிட்டையும் போட்டுக்கப்பா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X