பீஹார் துணை முதல்வருக்கு கொரோனா: எய்ம்ஸில் அனுமதி

Added : அக் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாட்னா: பீஹார் சட்டசபை பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், அம்மாநில துணை முதல்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.வரும் அக்.,28 முதல் மூன்று கட்டங்களாக பீஹார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நவ.,10ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் பிரசாரத்தில் ஆர்.ஜே.டி., மற்றும் ஜெ.டி.யூ கட்சியினர் மும்முரமாக உள்ளனர். பிரதமர் மோடி 23ம் தேதி
Bihar, DeputyCM, SushilKumarModi, TestsPositive, Covid-19, Admitted, AIIMS, Patna

பாட்னா: பீஹார் சட்டசபை பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், அம்மாநில துணை முதல்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வரும் அக்.,28 முதல் மூன்று கட்டங்களாக பீஹார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நவ.,10ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் பிரசாரத்தில் ஆர்.ஜே.டி., மற்றும் ஜெ.டி.யூ கட்சியினர் மும்முரமாக உள்ளனர். பிரதமர் மோடி 23ம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார். இந்நிலையில் பீஹார் துணை முதல்வரும், பா.ஜ., தலைவருமான சுஷில் குமார் மோடிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


latest tamil news



சுஷில் குமார், ஞாயிறன்று முதல்வர் நிதிஷ் குமாருடன் இணைந்து பக்சார் மற்றும் போஜ்பூர் மாவட்டங்களில் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சுஷில் குமார் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: அனைத்தும் இயல்பாக உள்ளது. லேசான காய்ச்சலுடன் தொடங்கியது. கடந்த 2 நாட்களாக அதுவும் இல்லை. கண்காணிப்புக்காக எய்ம்ஸில் சேர்ந்துள்ளேன். நுரையீரல் இயல்பாக இருப்பதாக சி.டி., ஸ்கேன் காட்டுகிறது. விரைவில் பிரசாரத்திற்கு திரும்புவேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X