வேளாண் சட்டம்: பஞ்சாப் - டில்லி முதல்வர்கள் கருத்து மோதல்

Added : அக் 22, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டம் தொடர்பாகப் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே டுவிட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கிடையே வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த அக்.,20ம் தேதி பஞ்சாப் சட்டசபையில் நான்கு தீர்மானங்கள்
Kejriwal, Amarinder, FarmBills, FarmLaws, Passed, Punjab, Assembly, Twitter, Clash, கெஜ்ரிவால், அமரீந்தர், வேளாண் சட்டம், பஞ்சாப், சட்டசபை, தீர்மானம்

புதுடில்லி: வேளாண் சட்டம் தொடர்பாகப் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே டுவிட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கிடையே வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த அக்.,20ம் தேதி பஞ்சாப் சட்டசபையில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதைப்போல் டில்லி அரசும் ஒரு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனப் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கோரிக்கை விடுத்தார். அதற்கு டுவிட்டர் மூலம் பதில் அளித்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இதனை நாடகம் என குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news



மேலும், அமரீந்தர் சிங் பஞ்சாபுக்கு அரசர் போல செயல்படுவதாக தெரிவித்துள்ள கெஜ்ரிவால், மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசு தடை செய்யும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமரீந்தர் சிங் அளித்த பதில்: ஆம் ஆத்மி மற்றும் சிரோமணி அகாலிதளம் கட்சிகளின் இரட்டை வேடம் ஆச்சரியமாக உள்ளது. அரசின் மசோதாவுக்கு இரு கட்சிகளும் சட்டசபையில் ஆதரவு அளித்து விட்டு வெளியே விமர்சிக்கின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகளைக் காக்கப் பஞ்சாப் அரசைப் பின்பற்றி இதைப்போல் மசோதாக்கள் நிறைவேற்ற வேண்டும். உங்கள் எதிர்வினை அறியாமையின் வெளிப்பாடு. டில்லி என்பது ஒரு மாநிலம் அல்ல என்பதால் நான் உங்களைக் குறை கூற முடியாது. இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-அக்-202006:47:34 IST Report Abuse
ஆப்பு பஞ்சாப்ல அறுவடையான நிலங்களில் கழிவுகளை அப்புடியே எரிச்சு காற்று மாசு தாங்க முடியலே. அதுக்கு ஒரு வழி வேளாண் மசோதாக்களில் இல்லை. வேற எதுக்கெல்லாமோ அடிச்சுக்கறாங்க.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-அக்-202004:05:33 IST Report Abuse
J.V. Iyer எப்படியெல்லாம் எதிர்க்கட்சிகள் மக்களை திசை திருப்புகின்றன??
Rate this:
Cancel
Mithun - Bengaluru,ஓமன்
22-அக்-202023:55:38 IST Report Abuse
Mithun இடைத்தரகர்கள் தான் பஞ்சாபில் பெரும் கோடீஸ்வரர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X