வேதியியல் மாற்றம்
எந்த ஒரு மாற்றத்தில் புதிய பொருள் தோன்றுகிறதோ, அது வேதியியல் மாற்றம் அல்லது வேதியியல் வினை என அழைக்கப்படுகிறது. உதாரணமாக கற்பூரம் எரியும் போது, கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராவி ஆகிய புதிய பொருள்கள் தோன்றுகின்றன. ஒளிச்சேர்க்கை, வெள்ளி கருப்பாகுதல், இரும்பு துருப்பிடித்தல் போன்றவை வேதியியல் மாற்றங்களில் சில. வேதிவினை நிகழ்வதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாடு தேவைப்படுகிறது. சில வினைகளுக்கு வெப்பம் தேவைப்படுகிறது. சிலவற்றுக்கு ஒளியும், சிலவற்றுக்கு உயர் அழுத்தமும் தேவைப்படுகிறது.
தகவல் சுரங்கம்
இயற்பியலின் தந்தை
அணுவின் அடிப்படைகளில் ஒன்றான எலக்ட்ரானை முதலில் கண்டறிந்தவர் பிரிட்டன் விஞ்ஞானி ஜே.ஜே.தாம்சன். மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் உள்பட பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். நவீன அணு இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். மின்னிறக்க குழாயில் மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைக் கண்டறிந்ததற்காக 1906ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். இவரது மாணவரான நியூசிலாந்து விஞ்ஞானி எர்னஸ்ட் ரூதர் போர்டு, அணுக்களை பிளக்க முடியும் என நிரூபித்தார். இது அணுகுண்டு தயாரிக்க அடிப்படையாக அமைந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE