பொது செய்தி

இந்தியா

சபர்மதி ஆற்றில் கடல் விமான போக்குவரத்து அக்.31ம் தேதி பிரதமர் துவக்கம்

Updated : அக் 22, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றில் முதல் முறையாக கடல் விமான போக்குவரத்தை வரும் 31 ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இது குறித்து குஜராத் மாநில அரசு கூறி இருப்பதாவது: சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஒற்றுமை சிலையை காண கடல்விமானம் (சீ பிளேன்) சேவை வரும் 31 ம் தேதி துவக்கப்படுகிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கி வைப்பார் என

புதுடில்லி: குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றில் முதல் முறையாக கடல் விமான போக்குவரத்தை வரும் 31 ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.



latest tamil news



இது குறித்து குஜராத் மாநில அரசு கூறி இருப்பதாவது: சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஒற்றுமை சிலையை காண கடல்விமானம் (சீ பிளேன்) சேவை வரும் 31 ம் தேதி துவக்கப்படுகிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக கடல் விமானம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா காலனியில் உள்ள ஒற்றுமை சிலைக்கு செல்லும். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்.,31-ம் தேதி இத்திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது.


latest tamil news



நாட்டிலேயே முதன் முறையாக கடல்விமானம் இயக்கப்படுகிறது.இவை தனியாரால் நிர்வகிக்கப்பட உள்ளது. இந்த விமானத்தில் 19 பேர் வரை பயணம் செய்ய முடியும் என்ற போதிலும் , 12 பேர் வரையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதற்கான கட்டணமாக ரூ.4,800 வசூலிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J BASKARAN - Tamilnadu,Chennai,இந்தியா
23-அக்-202007:53:50 IST Report Abuse
J BASKARAN Jai Hind
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X