புது டில்லி: தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம் என பா.ஜ.க., அறிவித்துள்ள நிலையில், உங்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதை அறிய தேர்தல் அட்டவனையை பாருங்கள் என ராகுல் கிண்டல் அடித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7.4 லட்சமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது. 61,775 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை இவ்வைரசுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்தியாவில் ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு, பாரத் பையோடெக்கின் கோவாக்சின் ஆகியவை சோதனை நிலையில் உள்ளன. இந்த நிலையில் பீகார் தேர்தல் வாக்குறுதியில் முதல் வாக்குறுதியாக, ஆட்சிக்கு வந்தால் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கபடும் என பா.ஜ.க., கூறியுள்ளது.

இதற்கு அரசியல் கட்சிகள் பலவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மத்திய அரசு கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. நீங்கள் எப்போது அதைப் பெறுவீர்கள் என்பதை அறிய மாநில வாரியாக தேர்தல் அட்டவணையைப் பார்க்கவும். போலி வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று.” என கூறியுள்ளார்.
பீகாரில் சுற்றுப்பயணத்தில் உள்ள மத்திய சுகாதார இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவிடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. “கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் தயாரிக்கப்படுகிறது. அது தயாரானதும், யாருக்கு முன்னுரிமை வழங்குவது உட்பட அதனை விரிவான திட்டத்தை தயாரித்துள்ளோம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இலவச கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும்.” என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE