பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : அக் 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
அக்., 23, 1778கர்நாடகத்தில், பெல்காம் அருகே உள்ள ககதி கிராமத்தில், 1778 அக்., 23ம் தேதி பிறந்தவர், சென்னம்மா. சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தையில் தேர்ச்சி பெற்றார். சமஸ்கிருதம், கன்னடம், மராட்டி, உருது மொழிகளைக் கற்றார். இவரின், 15வது வயதில், கிட்டூர் மன்னருடன் திருமணம் நடைபெற்றது. 1816ல், கணவரும், ஒரே மகனும் இறந்தனர்.இதையடுத்து, ஆங்கிலேய அரசு, பெரும்
 இதே நாளில் அன்று


அக்., 23, 1778கர்நாடகத்தில், பெல்காம் அருகே உள்ள ககதி கிராமத்தில், 1778 அக்., 23ம் தேதி பிறந்தவர், சென்னம்மா. சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தையில் தேர்ச்சி பெற்றார். சமஸ்கிருதம், கன்னடம், மராட்டி, உருது மொழிகளைக் கற்றார். இவரின், 15வது வயதில், கிட்டூர் மன்னருடன் திருமணம் நடைபெற்றது. 1816ல், கணவரும், ஒரே மகனும் இறந்தனர்.இதையடுத்து, ஆங்கிலேய அரசு, பெரும் படையுடன் வந்து, கிட்டூர் ராஜ்ஜியத்தை முற்றுகையிட்டது. போரில், சென்னம்மா தீரத்துடன் போரிட்டு, இரண்டு ஆங்கிலேய அதிகாரிகளைச் சிறைபிடித்தார். ஆங்கிலேயப் படைத் தளபதி சாப்ளின், போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து, அதிகாரிகளை மீட்டுச் சென்றான்.
ஆனால், நயவஞ்சகத்துடன் மேலும் அதிகமான படையுடன் வந்து, கிட்டூரை மீண்டும் தாக்கினான். 12 நாட்கள் நீடித்த போரின் முடிவில், சென்னம்மா சிறைபிடிக்கப்பட்டார். பைல்ஹோங்கல் கோட்டையில் சிறையில் இருந்தவர், 1829, பிப்., 21ம் தேதி, தன், 51-வது வயதில் காலமானார். கிட்டூர் ராணி சென்னம்மா பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
23-அக்-202016:07:51 IST Report Abuse
Vijay D Ratnam இது மாதிரி வீரப்பெண்மணிகள் குறித்து மாணவ மாணவிகள் பாட புத்தகத்தில் படித்தால் நல்ல சமுதாயம் வளரும். திருட்டுப்பயலுவோ கஜினி முகமது பற்றி நாலைந்து பொண்டாட்டி கட்டுன ஷாஜஹான் போன்றவர்களை பற்றி, அடுத்த மதத்தை அழிக்க துடித்த ஒளரங்கசீபு பற்றி படித்தால் எப்படி இருக்கும்.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
23-அக்-202008:07:07 IST Report Abuse
Loganathan Kuttuva Rani Chennamma statue is in Hobli city.One express train is running in her name.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X