பா.ஜ., செல்வாக்கை உயர்த்த மூவர் கூட்டணி அதிரடி வியூகம்

Updated : அக் 24, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
மத்திய அரசு மற்றும் பா.ஜ.,வின் செல்வாக்கை, மக்களிடம் உயர்த்த, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா ஆகியோர் அடங்கிய கூட்டணி, ஐந்து அம்ச திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.லோக்சபாவுக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. இரண்டாவது முறையாக, பிரதமராக மோடி
பா.ஜ., செல்வாக்கை உயர்த்த  மூவர் கூட்டணி அதிரடி வியூகம்

மத்திய அரசு மற்றும் பா.ஜ.,வின் செல்வாக்கை, மக்களிடம் உயர்த்த, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா ஆகியோர் அடங்கிய கூட்டணி, ஐந்து அம்ச திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

லோக்சபாவுக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. இரண்டாவது முறையாக, பிரதமராக மோடி பதவியேற்றார். பா.ஜ.,வின், தலைவராக இருந்து வந்த அமித் ஷா, உள்துறை அமைச்சராக பதவியேற்றார். இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து, 17 மாதங்கள் முடிந்த நிலையில், அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.இந்நிலையில், ஆட்சி மற்றும் கட்சியின் செல்வாக்கை, மக்களிடம் உயர்த்த, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன், பிரதமர் மோடி, தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதையடுத்து, ஐந்து அம்ச திட்டங்களை செயல்படுத்த, இந்த மூவர் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது.


அமைச்சரவை மாற்றம்பீஹார் சட்டசபை தேர்தல் முடிந்த பின், மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அமைச்சரவையில், 14 இடங்கள் காலியாக உள்ளன. மூத்த அமைச்சர்கள் பலரும், மூன்று துறைகளை கவனித்து வருகின்றனர். சில மாநிலங்களில் உள்ள கட்சியின் மூத்த தலைவர்களை, மத்திய அமைச்சர்களாக்க திட்டமிடப்பட்டுள்ளது.அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கவும், மோடி முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, ஆர்,.எஸ்.எஸ்., மூத்த தலைவர்களுடன், பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர், மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான வியூகமும் தயாராகி உள்ளது.


புதிய கட்சிகள்தே.ஜ., கூட்டணியிலிருந்து, பா.ஜ.,வின் நீண்ட கால கூட்டணி கட்சிகளான சிவசேனா, அகாலிதளம் ஆகியவை விலகி விட்டன.மேற்கு வங்கத்தில், ஜி.எம்.எம்., எனப்படும், கூர்க்கா முக்தி மோர்ச்சாவும், கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டது.இதனால், அடுத்த லோக்சபா தேர்தலில் இழப்பு ஏற்படுவதை தடுக்க, கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி யின், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் உட்பட, சில கட்சிகளை சேர்க்கும் நடவடிக்கை துவங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கினால், அந்த கட்சியை, தே.ஜ., கூட்டணியில் சேர்க்க, முயற்சிகள் துவங்கியுள்ளன.


வாக்குறுதிகள்அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல், ஜம்மு - காஷ்மீரில், 370வது சட்டப்பிரிவை நீக்குதல், 'முத்தலாக்' தடை ஆகிய நீண்டநாள் வாக்குறுதிகளை, மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. அதேபோல், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. அடுத்ததாக, பெண்களின் திருமண வயதை, 18லிருந்து, 21ஆக உயர்த்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். மேலும், மக்கள் நலத்திட்டங்களை விரைவுப்படுத்தி, அரசின் செல்வாக்கை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.


காங்., திட்டம் முறியடிப்புமத்திய அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால், கட்சிக்கு நிரந்தர தலைவர் நியமிப்பதில், காங்கிரசில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை ஓரணி யில் திரட்டும் முயற்சியை தோற்கடிக்க, காங்., கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகளை, தே.ஜ., கூட்டணியில் சேர்க் கவும் திட்டமிடப்ட்டுள்ளது.


கவனம்லோக்சபாவுக்கு, 2024ல் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களிலும், கர்நாடகாவை தவிர, வேறு எந்த தென் மாநிலங்களிலும், பா.ஜ.,வால் பெரிய வெற்றி பெற முடியவில்லை. வட மாநிலங்கள் தான், முழுமையாக கை கொடுத்தன. ஆனால், அடுத்த தேர்தலில், வட மாநிலங்களில், முந்தைய தேர்தல்களில் பெற்ற வெற்றி போல், இந்த முறை கிடைக்காத நிலை ஏற்படலாம் என, பா.ஜ., கருதுகிறது. அதனால், தென் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தி, குறைந்தது, 30 - 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளவும், மூவர் கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதற்காக, பா.ஜ., ஆட்சி மன்றக் குழுவிலும் மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தையும், பீஹார் தேர்தல் முடிந்த பின், ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.- புதுடில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-அக்-202019:28:16 IST Report Abuse
Malick Raja எல்லாம் சரிதான் .. வயசு முதிர்ந்து கொண்டே போகுமே தவிர . இறங்காது .. பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் இவ்வுலகம் கண்டுள்ளது .. இருந்த இடம் தெரியவில்லை .. புரிஞ்சா சரி .
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
24-அக்-202013:33:24 IST Report Abuse
Nagarajan D உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்... பிஜேபி தென்னகத்தில் வளர வேண்டும் இல்லை என்றால் பின்னாளில் பிரச்சனைகள் உருவாகும்
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
23-அக்-202021:37:42 IST Report Abuse
J.Isaac ரத்னம் அவர்களே முதலில் தாழ்ந்த நிலையில் உள்ள இந்து தலித், இந்து பள்ளர்கள், இந்து பறையர், இந்து நாசுவர், இந்து வண்ணார், இந்து மலை ஜாதியினர், இந்து ஆதிவாசிகள் இந்து மறவர், இந்து அருந்ததியர், இவர்களின் வாழ்க்கை தரத்தை கல்வி தரத்தை உயர்த்தி சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்க வியூகம் பண்ணுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X