பொது செய்தி

இந்தியா

செல்லுபடியாகும் 'விசா' எது? மத்திய அரசு அறிவிப்பு!

Updated : அக் 24, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : 'சுற்றுலா, மருத்துவக் காரணங்களுக்காக வழங்கப்பட்ட மற்றும் மின்னணு முறையில் வழங்கப்பட்ட, 'விசா'க்களைத் தவிர, நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்ற அனைத்து விசாக்களும் செல்லுபடியாகும்' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. 'வந்தே பாரத்' உலகெங்கும், கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தாண்டு, பிப்ரவரியில், விசாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
செல்லுபடியாகும் 'விசா' எது?   மத்திய அரசு அறிவிப்பு!

புதுடில்லி : 'சுற்றுலா, மருத்துவக் காரணங்களுக்காக வழங்கப்பட்ட மற்றும் மின்னணு முறையில் வழங்கப்பட்ட, 'விசா'க்களைத் தவிர, நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்ற அனைத்து விசாக்களும் செல்லுபடியாகும்' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.


'வந்தே பாரத்'


உலகெங்கும், கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தாண்டு, பிப்ரவரியில், விசாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மார்ச் இறுதியில் இருந்து, சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது.வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள்மற்றும் நாடு திரும்ப விரும்பியவர்களுக்காக, 'வந்தே பாரத்' என்ற பெயரில், சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. 'கடந்த எட்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசாக்கள் மீண்டும் செல்லுபடியாகும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:பல்வேறு நோக்கங்களுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டு, காலாவதியாகாத விசாக்கள் செல்லுபடியாகும். அதே நேரத்தில், மின்னணு முறையில் வழங்கப்பட்ட விசாக்கள்,சுற்றுலா மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக வழங்கப்பட்ட விசாக்கள் மட்டும் செல்லுபடியாகாது.



அனுமதி



இந்தியாவில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள விரும்புவோர், மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.ஓ.சி.ஐ., எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியக் குடிமகன், பி.ஐ.ஓ., எனப்படும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ள அட்டைகள் வைத்துள்ளோர், சுற்றுலாவைத் தவிர பிற காரணங்களுக்காக வருவதற்கு அனுமதிக்கப்படுவர். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் மத்திய விமானப் போக்கு வரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ள விமானங்களில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.அதே நேரத்தில், முக கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தொடரும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
23-அக்-202007:49:12 IST Report Abuse
blocked user பண்டிகைகள், திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள் தவிர மதம் பரப்ப அனுமதிக்கக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X