வி.சி.,க்கு 4 + 4? : தி.மு.க., வைக்கிறது செக்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வி.சி.,க்கு 4 + 4? : தி.மு.க., வைக்கிறது 'செக்!'

Updated : அக் 23, 2020 | Added : அக் 22, 2020 | கருத்துகள் (31)
Share
வரும் சட்டசபை தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு, 'செக்' வைக்கும் விதமாக, 4 + 4 என்ற அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. அதிலும், அக்கட்சி சொந்த சின்னத்தில் போட்டியிட முடியாத வகையில், 'உனக்கு பாதி; என் சின்னத்தில் மீதி' என, பேரம் பேசும் திட்டமும், தி.மு.க., தலைமைக்கு இருப்பதாக தெரிகிறது. கடந்த, 2019ம் ஆண்டின் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,
வி.சி.,க்கு    4 + 4? தி.மு.க., வைக்கிறது 'செக்!'

வரும் சட்டசபை தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு, 'செக்' வைக்கும் விதமாக, 4 + 4 என்ற அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது.

அதிலும், அக்கட்சி சொந்த சின்னத்தில் போட்டியிட முடியாத வகையில், 'உனக்கு பாதி; என் சின்னத்தில் மீதி' என, பேரம் பேசும் திட்டமும், தி.மு.க., தலைமைக்கு இருப்பதாக தெரிகிறது.

கடந்த, 2019ம் ஆண்டின் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைககள் கட்சி, சிதம்பரம், விழுப்புரம் ஆகிய, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது.
விழுப்புரத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் ரவிகுமார், 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டு, கணிசமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆனால் சிதம்பரத்தில், 'பானை' சின்னத்தில் போட்டியிட்ட, வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி பெற, கடுமையாக போராட வேண்டியதாகி விட்டது. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தான், அவரால் கரையேற முடிந்தது. ஒரு லோக்சபா தொகுதிக்கு, நான்கு சட்டசபை தொகுதிகள் என்ற அடிப்படையில், வி.சி., வெற்றி பெற்ற, இரண்டு எம்.பி., தொகுதிகளுக்கு, எட்டு சட்டசபை தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
அந்த எட்டு தொகுதிகளுள், நான்கில் தனிச் சின்னத்திலும், மீதமுள்ள நான்கில், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட வேண்டும் என, வி.சி., கட்சிக்கு, தி.மு.க., 'செக்' வைக்கிறது.
கக
தனிச் சின்னத்தில் போட்டியிட்டு, நான்கு தொகுதிகளில், வி.சி., தோல்வி அடைந்தாலும், மீதமுள்ள நான்கு தொகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில் வெற்றி கிடைக்கும் என, தி.மு.க., தரப்பில் கணக்கு போடப்படுகிறது. அதனால், சொந்த சின்னத்தில், வி.சி., போட்டியிட இடம் அளிக்காமல், 'உனக்கு பாதி; என் சின்னத்தில் மீதி' என நிபந்தனை விதிக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது.அதே நேரத்தில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, பா.ம.க., வெளியேறி, தனித்து போட்டியிடும் நிலைமை உருவானால், தி.மு.க.,வின் கணக்கு மாறும் என கூறப்படுகிறது.
அதாவது, வி.சி.,க்கு, எட்டு தொகுதிகள் கிடைக்காது என்றும், அதில் பாதியே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

அந்த நான்கிலும், உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். அதற்கு மறுத்தால், வி.சி., கட்சியை வெளியேற்ற, தி.மு.க., தயங்காது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில், வி.சி., கட்சியைச் சேர்ந்த ரவிகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே, அவரது எம்.பி., தொகுதிக்கு என ஒதுக்கப்படும், நான்கு சட்டசபை தொகுதிகள், தி.மு.க., கணக்கில் சேர்ந்து விடும். அவற்றில் போட்டியிடும், வி.சி., வேட்பாளர்கள், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களாகவே கருதப்படுவர்.திருமாவளவன் வென்ற தொகுதிக்கான, நான்கு சட்டசபை தொகுதிகளில், தனிச் சின்னத்தில் போட்டியிடலாம். ஆனாலும், அதை அவரது கட்சிக்கான சொந்த சின்னமாக கருத முடியாது. சுயேச்சைகள் போல, ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சின்னத்தில் போட்டியிடும் நிலைமை கூட வரலாம். அதனால், அதற்கு வி.சி., சம்மதம் தெரிவிக்காது. அதனால், அனைவருமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் வி.சி.,க்கு ஏற்படும். அது தான், தி.மு.க.,வின் திட்டம்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரம் கூறியது.


பா.ம.க., வெளியேறுகிறது?கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெற்று, ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு, தோல்வியை சந்தித்தது. வரும் சட்டசபை தேர்தலில், கூட்டணி குறித்த முடிவை, இன்னும் பா.ம.க., அறிவிக்கவில்லை. இந்நிலையில், நேற்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், 'ஆந்திராவில், அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார்.
'ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள், மக்களின் கோரிக்கைகள் குறித்து, எதையும் சொல்ல மறுக்கின்றனர்; சொன்னாலும் செய்ய மறுக்கின்றனர்' என, அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையின் வாயிலாக, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, பா.ம.க., வெளியேறுகிறதா என்ற, கேள்வி எழுந்துள்ளது. ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி, அதிக தொகுதிகள் என்பது தான், பா.ம.க.,வின் நிபந்தனைகள்.

இதற்கு உடன்படும் கட்சியுடன் கூட்டு சேர, பா.ம.க., விரும்புகிறது. ஆனால், துணை முதல்வர், ஆட்சியில் பங்கு போன்ற நிபந்தனைகளை ஏற்க, தி.மு.க., மறுத்து விட்டது; அ.தி.மு.க.,வும் இன்னும் செவிசாய்க்கவில்லை. அதனால், தனித்து போட்டியிட, பா.ம.க., தயாராகி வருகிறது.
அதாவது, 'மாற்றம், முன்னேற்றம், வன்னியர்' என்ற கோஷத்தை முன்னிலைப்படுத்த, ராமதாஸ் சில திட்டங்களை வகுத்துள்ளார்.

வன்னியர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை மையப்படுத்தி, வன்னியர் சமுதாய இளைஞர்களை போராட்டத்திற்கு தயார்படுத்த, ராமதாஸ் முடிவு செய்துள்ளார்.
பா.ம.க.,வின் தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை, அ.தி.மு.க., - தி.மு.க., ஏற்றுக் கொண்டால், வன்னியர் அல்லாத ஜாதிகளின் ஓட்டுகளை இழக்க நேரிடும். அதனால், இரு கட்சிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, தனித்து போட்டியிடவும், வட மாவட்டங்களில் வெற்றியை தக்க வைக்கவும், 20 சதவீத இட ஒதுக்கீடு போராட்ட அறிவிப்பை, ராமதாஸ் நேற்று அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:
கொரோனா பாதிப்புகள் ஓரளவு குறைந்த பின், புத்தாண்டில் வன்னியர்களுக்கான, 20 சதவீதம் தனி இட ஒதுக்கீ்டு போராட்டம் துவக்கப்படும். 33 ஆண்டுகளுக்கு பின், தனி இட ஒதுக்கீடு கேட்டு, வரலாறு காணாத வகையில் போராட்டம் நடத்தப்படும். 'போராட்டத்தை கைவிட்டு வாருங்கள். வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டுக்கான உடன்பாட்டில் கையெழுத்திடுங்கள்' என, அரசு அழைப்பு விடுக்கும் வகையில், போராட்டம் கடுமையாக அமையும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.


ஜாதிக்கொரு நல வாரியம் !ராமதாசின் மற்றொரு அறிக்கை :ஆந்திராவில், 56 வகையான பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் முன்னேற்றத்திற்காக, ஒவ்வொரு ஜாதிக்கும், ஒரு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, ஒவ்வொரு ஜாதிக்கும், மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள, 263 ஜாதிகளில், எந்தெந்த ஜாதிகளின் மக்கள்தொகை, 30 ஆயிரத்திற்கு அதிகமோ, அந்த ஜாதிகளுக்கு தனித்தனி நல வாரியம் அமைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார். - நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X